சேத்தியாத்தோப்பு அருகே மிராளூர் சுடுகாட்டை ஆக்கிரமித்து மணல்குவாரிக்கு பாதை திறக்க முயற்சி கிராமமக்கள் எதிர்ப்பு.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே மிராளுர் அரசு மணல்குவாரி அமைந்துள்ளது.இக்குவாரியானது ஆபத்தானது இதனால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று மிராளூர் கிராமமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.தற்போது உள்ளமணல்குவாரிக்கான வழியானது சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றின் வளைவான பகுதியில் கரையை உடைத்து சில மாதங்களாக மணல் அள்ளப்பட்டது.அந்த வழித்தடம் மழையால் சேதமடைந்ததால் மணல் அள்ளுவதற்கு சிரமம் ஏற்பட்டது.இதனிடையே மழையால் சேதமடையாத வகையில் அதிகாரிகள் மாற்று பாதை அமைக்கும் முயற்சியில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டும் வந்த நிலையில் நேற்று மாலை மிராளூர் கிராடத்தை சேர்ந்த பொதுமக்கள் இருபதுக்கும் மேற்பட்டோர் சுடுகாட்டில் மணல் அள்ளும் பாதையை அமைக்க கூடாது.இதனால் சுடுகாடு பாதிப்படையும்,எப்போதும் லாரிகள் சுடுகாட்டு பாதை வழியாக அதிகளவில் செல்வதால் யாரேனும் இறந்தால் எங்களால் புதைக்க கூட முடியாது என்று கூறி கோஷமிட்டனர்.மேலும் அதிகாரிகள் எங்களது குரலுக்கு செவிசாய்க்காவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதப்போராட்டம்மற்றும் சாலைமறியல் போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்தனர்.சுடுகாட்டு வழியாக மணல்குவாரிக்கு பாதை அமைக்க கூடாது என்று கோஷமிட்ட அவர்கள் சிறிது நேரத்தில் கலைந்து சென்றனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Friday, December 7, 2018
சேத்தியாத்தோப்பு அருகே மிராளூர் சுடுகாட்டை ஆக்கிரமித்து மணல்குவாரிக்கு பாதை திறக்கமுயற்சி கிராமமக்கள் எதிர்ப்பு
சேத்தியாத்தோப்பு அருகே மிராளூர் சுடுகாட்டை ஆக்கிரமித்து மணல்குவாரிக்கு பாதை திறக்க முயற்சி கிராமமக்கள் எதிர்ப்பு.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே மிராளுர் அரசு மணல்குவாரி அமைந்துள்ளது.இக்குவாரியானது ஆபத்தானது இதனால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று மிராளூர் கிராமமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.தற்போது உள்ளமணல்குவாரிக்கான வழியானது சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றின் வளைவான பகுதியில் கரையை உடைத்து சில மாதங்களாக மணல் அள்ளப்பட்டது.அந்த வழித்தடம் மழையால் சேதமடைந்ததால் மணல் அள்ளுவதற்கு சிரமம் ஏற்பட்டது.இதனிடையே மழையால் சேதமடையாத வகையில் அதிகாரிகள் மாற்று பாதை அமைக்கும் முயற்சியில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டும் வந்த நிலையில் நேற்று மாலை மிராளூர் கிராடத்தை சேர்ந்த பொதுமக்கள் இருபதுக்கும் மேற்பட்டோர் சுடுகாட்டில் மணல் அள்ளும் பாதையை அமைக்க கூடாது.இதனால் சுடுகாடு பாதிப்படையும்,எப்போதும் லாரிகள் சுடுகாட்டு பாதை வழியாக அதிகளவில் செல்வதால் யாரேனும் இறந்தால் எங்களால் புதைக்க கூட முடியாது என்று கூறி கோஷமிட்டனர்.மேலும் அதிகாரிகள் எங்களது குரலுக்கு செவிசாய்க்காவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதப்போராட்டம்மற்றும் சாலைமறியல் போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்தனர்.சுடுகாட்டு வழியாக மணல்குவாரிக்கு பாதை அமைக்க கூடாது என்று கோஷமிட்ட அவர்கள் சிறிது நேரத்தில் கலைந்து சென்றனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...