துர்நாற்றம் வீசும் குளம் சுத்தப்படுத்த கோரிக்கை.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே பின்னலூர் கிராமம்உள்ளது.இக்கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையோரம் குளம் ஒன்று உள்ளது.இக்குளத்திலிருந்து துர்நாற்றம் வீசுவதால் சாலைகளில் செல்வோரும்,குளத்தினருகில் இருப்பவர்களும் பெரும் வேதனை அடைந்து வருகிறார்கள்.இதுகுறித்துஅப்பகுதியினர் தெரிவிக்கும்போது குளத்தில் தண்ணீர் சுத்தம் செய்து நீண்டநாட்களாவதால் தண்ணீர் துர்நாற்றம் வீசுவதோடு, அதில் கொசுக்கள் உற்பத்தியாகி அருகிலுள்ள குடியிருப்புவாசிகளை தொல்லைக்கொடுத்து வருகின்றன.மேலும் அதிகாரிகள் குளத்தினை ஆய்வு செய்து விரைந்து தண்ணீரை வடியவைத்து பிறகு புதிய தண்ணீர் விடவேண்டும் எனவும்,இப்பகுதியிலுள்ள பலர் குளத்தில் குப்பைகள்,இறைச்சி,பிளாஸ்டிக்கழிவுகழிவுகள் கொட்டி வருகிறார்கள் அதனையும் தடுத்து நிறுத்திடவேண்டும்.அப்போதுதான் குளத்திலிருந்து துர்நாற்றம் வீசாது, மற்றும் கொசுத்தொல்லையும் இருக்காது என்று அவர்கள் தெரிவித்தனர்.
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...