உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Wednesday, December 12, 2018

காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டை பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி



காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டை பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி.கடலூர்மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ளது லால்பேட்டை பேரூராட்சி.இங்கு மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவுப்படியும், கடலூர் மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் இளங்கோவன் அறிவுறுத்தலின்படியும் நடைபெற்ற இந்த பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியானது நடைபெற்றது.இதில் லால்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் சீனிவாசன் தலைமை வகித்து விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.லால்பேட்டை அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்,லால்பேட்டை அனைத்துவணிகர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்த பேரணியானது அரசுப்பள்ளியிலிருந்து துவங்கி முக்கிய வீதிகளின் வழியாக பிளாஸ்டிக் ஒழிப்போம் கோஷங்களுடன்,மற்றும் பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டும் இப்பேரணியானது லால்பேட்டை பேரூராட்சி அலுவலகம் வந்தடைந்தது.இந்நிகழ்ச்சியில் அரசுப்பள்ளி மாணவர்கள்,ஆசிரியர்கள்,சுகாதாரமேற்பார்வையாளர்கள்,லால்பேட்டை பேரூராட்சியின் அனைத்து பணியாளர்கள்,டெங்குபணியாளர்கள் என பல்வேறு தரப்பினர் பங்கேற்றனர்.தமிழகத்தில் தமிழக அரசு வருகிற ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து சுற்றுப்புறச்சீர்கேட்டை உருவாக்கும் பிளாஸ்டிக் பயன்படுத்த தடையை ஏற்கெனவே விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.