சேத்தியாத்தோப்பு அருகே புடையூர் ஊராட்சியில் கிராமமக்களுக்கு நிலவேம்பு
கஷாயம் வழங்கல்.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே கீரப்பாளையம்
ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புடையூர் ஊராட்சியில் வட்டார வளர்ச்சி
அதிகாரி விஜயா தலைமையில் கிராமமக்களுக்கு டெங்கு
நோய்த்தாக்குதல்களிலிருந்து காத்திடும் மருந்தான நிலவேம்பு கஷாயம்
வழங்கப்பட்டது.இதில் துணை வட்டார வளர்ச்சி அதிகாரி சந்தோஷ்குமார்,ஒன்றிய
மேற்பார்வையாளர் விஜய்,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மேலும் புடையூர் கிராம
விஏஓ பாரதிதாசன் மற்றும் ஏராளமான கிராபொதுமக்கள்
பங்கேற்றனர்.நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பை புடையூர் ஊராட்சி செயலர்
ஐயப்பன் செய்திருந்தார்.