சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்தில் ஆலோசனைக்கூட்டம்.கடலூர் மாவட்டம்
சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்தில் போலீசார் மற்றும் அனைத்து வணிகர்கள்
கலந்து கொண்ட ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு
சேத்தியாத்தோப்பு காவல் ஆய்வாளர் ராஜா தலைமை வகித்தார்.சேத்தியாத்தோப்பு
அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் மகாராஜன்,அனைத்து வியாபாரிகள்
சங்கத்தின் பொதுச்செயலாளர் மணிமாறன் ,மாவட்ட தலைவர் பக்கிரிசாமி ஆகியோர்
முன்னிலை வகித்தனர்.பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் சேத்தியாத்தோப்பு
பகுதியில் குற்றச்சம்பவங்களை தடுப்பதற்கு தவறாமல் அனைத்து வியாபாரிகளும்
கண்காணிப்பு கேமரா பொறுத்துதல் அவசியம்.கண்காணிப்பு கேமராக்களை சிலவற்றை
கடை முகப்பு மற்றும் தெருவைப்பார்ப்பதுபோல் அமைப்பது
முக்கியம்,சந்தேகத்திற்கிடமான நபர்கள் நடமாட்டம் தெரிந்தால் காவல்
துறைக்கு தெரியப்படுத்தவும்,இருசக்கர வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட்
அணிந்து ஓட்டுதல் வேண்டும், ஆக்கிரமிப்புக்களை போக்குவரத்து ,
பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளதை அகற்றிட வேண்டும்,எல்லா வாகனம்
ஓட்டுநர்களும் ஓட்டுநர் உரிமம்,எடுத்திடவேண்டும், பதினெட்டு வயதுக்கு
கீழ்உள்ளவர்கள் வாகனத்தை இயக்க பெற்றோர்கள் அனுமதிக்க கூடாது உள்ளிட்ட
பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.இந்நிகழ்ச்சி யில்
சேத்தியாத்தாப்பு காவல் நிலைய அனைத்து காவலர்களும்,நகரின் அனைத்து
வியாபாரிகளும் உடனிருந்தனர்.முடிவில் அனைத்து வியாபாரிகள் சங்க
பொதுச்செயலாளர் மணிமாறன் நன்றி கூறினார்.