உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Monday, December 3, 2018

சேத்தியாத்தோப்பில் பெண்களுக்கான குடும்ப வன்முறை குறைப்பு புத்துணர்வு கருத்தரங்கு


சேத்தியாத்தோப்பில் பெண்களுக்கான குடும்ப வன்முறை குறைப்பு புத்துணர்வு கருத்தரங்கு.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் அரசு நடுநிலைப்பள்ளியில் பெண்களுக்கான குடும்ப வன்முறை குறைப்பு புத்துணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.அடேகம் நெட்வொர்க்,சேவ் டிரஸ்ட்,மைத்திரி நெட்வொர்க் ஆகியவை இணைந்து நடத்தி இந்நிகழ்ச்சியில் சேவ் டிரஸ்ட் அமுதமொழி தலைமை வகித்தார்.அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சேகர்,மகளிர் காவல்நிலைய ஆலோசனைக்குழு  பொற்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிஆர்பி நிர்மலா வரவேற்றார்.பின்னர் நடைபெற்ற நிகழச்சியில் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் குடும்ப வன்முறையை எப்படி குறைப்பது?, அனைத்து பிரச்னைகளுக்கும் குடும்பத்திலுள்ளவர்களிடம் மனம் திறந்து பெண்கள் பேசவேண்டும், தொலைக்காட்சியில் தவறான வழிகாட்டும் நிகழ்ச்சிகளை அனைத்து வயதினரும் தவிர்த்தல்,குடும்பத்தில் எப்போதும் அன்பு,பாசம்,ஒற்றுமை நிலைத்திருக்க பெண்கள் விட்டுக்கொடுத்துபோதுதல் உள்ளிட்ட பல்வேறு குடும்ப நலன்சார்ந்த விஷயங்கள் விவாதிக்கப்பட்டது.மேலும் இதில் சமூகநலத்துறை கீரப்பாளையம் சித்ரா,வழக்கறிஞர் டெல்பினா மேரி, உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.