அரசு பேருந்து திடிரென்று பழுதானதால் பயணிகள் அவதி.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் நேற்று மதியம் ஒன்றரை மணியளவில் கும்பகோணத்திலிருந்து சென்னை செல்லும் அரசு விரைவு பேருந்தானது சேத்தியாத்தோப்பு ராஜீவ்காந்தி சிலைப்பகுதி அருகே வந்தபோது திடிரென்று நின்றது.நீண்டநேரமாக பேருந்தின் டிரைவர் பேருந்தை எடுக்க முயற்சித்தும் பேருந்து அப்படியே நின்றது.மிகவும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் பேருந்து நடுரோட்டில் நின்றதால் பின்னால் வந்த வாகனங்கள் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தின.இதன்பின்பு பேருந்தில் இருந்த அனைத்து சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பயணிகளும் கீழே இறக்கி விடப்பட்டனர்.அவர்கள் நீண்ட நேரக்காத்திருப்புக்குபின் வேறு பேருந்துகளில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.இதுகுறித்து பயணிகள் தெரிவிக்கும்போது பேருந்துகள் இதுபோன்று நடுவழியில் பழுதாகி நிற்பதால் எங்களால் சரியாண நேரத்திற்கு வேலைக்கு செல்லமுடியவில்லை மற்றும் கைக்குழந்தைகள் வைத்திருப்போர்,உடல்நலமில்லாதவர்கள்,முதியவர்கள் என பலரும் பெரும் சிரமத்திற்கும் வேதனைக்குள்ளாகிறோம்.அதிகாரிகள் பேருந்துகளை ஆய்வு செய்து பழுதில்லா பேருந்துகளை இயக்கவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
படம்&5