அரசு வேளாண்மைத்துறை நெல்விவசாயிகளுக்கு பயிர்காப்பீடு செய்ய அறிவுறுத்தல்.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் சுமார் இருபதாயிரம் ஏக்கர்க்குமேல் தற்போது விவசாயிகள் சம்பா நெல் பயிரிட்டுள்ளனர்.இவர்களுடைய வாழ்வாதாரத்தை காக்கும் பொருட்டு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அனைத்து விவசாயிகளும் நேரடியாக பயன்பெறும் வகையில் அரசு வேளாண்மைத்துறை மூலம் உரம்,பூச்சி மருந்து,தரமான விதைகள்,மற்றும் விவசாயம் தொடர்பான அனைத்து ஆலோசனைகள்என இடைவிடாது வேளாண் அதிகாரிகள் விவசாயிகளுக்கு வழங்கி ஆய்வுகள் செய்தும் வருகிறார்கள்.இந்நிலையில் இந்தாண்டு சம்பா பருவத்திற்கு நெல் பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசானது பயிர்காப்பீடு செய்வதற்கு விவசாயிகளிடம் தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.அதன்படி சேத்தியாத்தோப்பு வேளாண்மைத்துறை அதிகாரிகள் நடப்பு சம்பா நடவு செய்துள்ள விவசாயிகளுக்கு இம்மாதம் 30&11&2018 அன்றுக்குள் அனைவரும் பயிர் காப்பீடு செய்ய வேண்டும் என்று விவசாயிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த ஒலிபெருக்கி வாகனத்தை சேத்தியாத்தோப்பு வேளாண்மைத்துறை அலுவலக முகப்பிலிருந்து துவக்கி வைத்தனர்.இது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கும்போது விவசாயிகள் உடனடியாக பயிர்காப்பீடு செய்வது அவசியம்.அதுவும் இம்மாதம் முப்பதாம் தேதிக்குள் செய்துகொள்ளவேண்டும்.பயிர்காப்பீடு செய்வதற்கு தேவைப்படுபவையாவது முன்மொழிப்படிவம்,பதிவு விண்ணப்பம்,ஆதார் அட்டை நகல்,சிட்டா,அடங்கல்(பயிர்சாகுபடிச்சான்று) வங்கிகணக்கு புத்தகத்தின் முதல்பக்க நகல்,உள்ளிட்ட ஆவணங்களை மேலேகுறிப்பிட்ட காலத்திற்குள் தங்கள்பகுதியில் உள்ள கூட்டுறவு வங்கி,தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள்,மற்றும் பொதுசேவை மையங்கள் என இவைகளில் தொடர்புகொண்டு தங்களது பயிர்காப்பீட்டின் ஒரு ஏக்கருக்கு ரூ.405 பிரிமியத்தை கட்டி தங்களது பயிர்களை பயிர்காப்பீடு செய்துகொள்ளவேண்டும் எனவும்,மேலும் கூடுதல் விவரங்களுக்கு தங்கள் பகுதி வேளாண்மைத்துறை அதிகாரிகளை சந்தித்து பயனடையவேண்டும் அவர்கள் தெரிவித்தனர்.
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...