உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Monday, November 26, 2018

சேத்தியாத்தோப்பு குறுக்குரோடு சிதம்பரம் சாலையில் டிராக்டரால் உழவு செய்து நாற்று நடும் போரட்டம் நடத்தப்போவதாக கிராமமக்கள் அறிவிப்பு





சேத்தியாத்தோப்ப குறுக்குரோடு  சிதம்பரம் சாலையில் டிராக்டரால் உழவு செய்து நாற்று நடும் போராட்டம் நடத்தப்போவதாக கிராமமக்கள் அறிவிப்பு.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோட்டில் சிதம்பரம்&விருத்தாசலம் சாலை செல்கிறது.இந்நச்சாலையானது சுமார் 45 கிமீ நீளமுள்ள் சாலையாக உள்ளது.இந்தச்சாலையில் விருத்தாசலத்திலிருந்து &பரங்கிப்பேட்டை வரை சாலை விரிவாக்கப்பணிகள் இரண்டாண்டுகளுக்கு முன்பு துவக்கப்பட்டது.பல இடங்களில் பணிகள் பிரித்து பிரித்து செய்யப்பட்டு வந்தவேளையில் தற்போது இந்த சாலைப்பணிகள் எதுவும் நடைபெறாமல் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நிறுத்தப்பட்டுள்ளது.இதனால் பல இடங்களில் சிறுபாலங்கள்,வாய்க்கால்கள் தோண்டப்பட்டு அதன் பணிகள் இன்னமும் முழுமையடையாமல் இருந்து வருகிறது.இவ்வாறு இருப்பதால் சிதம்பரம் விருத்தாசலம் சாலையானது பல இடங்களில் இரண்டடி முதல் நான்கடி பள்ளம் விழுந்து அதில் மழைத்தண்ணீர் தேங்கியும் மிகவும் சாலை மோசமாக சேதமடைந்து காணப்படுகிறது.இதுபோன்று சேத்தியாத்தோப்பு குறுக்குரோடு பகுதியில் சிதம்பரம்,புவனகிரி வழிச்சாலையானது பல இடங்களில் சேறும் சகதியுமாக,பள்ளங்கள் ஏற்பட்டு மழைத்தண்ணீர் தேங்கி நிற்கிறது.சாலையும் வாகனங்கள் செல்லமுடியாத நிலையில் இருக்கிறது.இந்தச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விழுந்து எழுந்து செல்கிறார்கள்.மேலும் இந்த சாலையில் செல்லும் பெரும்பாலான பேருந்துகள் சாலை மிக மோசமாக பழுதடைந்துள்ளதால் மாற்று வழியில் நீண்டதூரம் சுற்றிச்செல்லும் அவலநிலையும் உள்ளது.இந்த சாலைப்பணியை விரைந்து முடிக்கவும், தரமான சாலையாகவும் தண்ணீர் தேங்காத சாலையாகவும் அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை எவ்விதமான நடவடிக்கையும் எடுக்க வில்லை என இப்பகுதியைச்சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்ட கிராமமக்கள் குற்றச்சாட்டினை முன்வைக்கிறார்கள்.அவர்கள் தெரிவிக்கும்போது சாலை விரிவாக்கப்பணிகள் முழுமையடையும் வரை சிதம்பரம் விருத்தாசலம் சாலையில் சேத்தியாத்தோப்பு குறுக்குரோடு புவனகிரி வழியில் உள்ள சாலைப்பகுதியை பள்ளங்கள் இல்லாமல் ,மழைத்தண்ணீர் தேங்காமல் தற்காலிகமாவது சீரமைக்கவேண்டும் என்றும் அதிகாரிகள் விரைவாக சாலையை சரி செய்யாவிட்டால் இப்பகுதியில் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட கிராமமக்கலான நாங்கள் ஒன்று சேர்ந்து சேத்தியாத்தோப்பு குறுக்குரோடு பகுதியில் புவனகிரி வழிச்சாலையில் டிராக்டரால்உழவு செய்து நாற்று நடும்போராட்டத்தை நடத்தமுடிவு செய்துள்ளோம் என்றும், அதிகாரிகள் சாலையை சீரமைக்கும் வரை தொடர்போராட்டங்களை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.