உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Thursday, November 29, 2018

சேத்தியாத்தோப்பு சர்க்கரை ஆலையில் கரும்பு அறவை பருவ துவக்க இளஞசூடேற்றும் விழா



சேத்தியாத்தோப்பு சர்க்கரை ஆலையில் கரும்பு அறவை பருவதுவக்க இளஞ்சூடேற்றும் விழா.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் அமைந்துள்ள எம்ஆர்கே கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பு 2018&19 ஆம் ஆண்டிற்கான கரும்பு அறவைப்பனிகள் மேற்கொள்வதற்கு ஆலையின் புதிய தலைவர் கானூர் பாலசுந்தரம்,ஆலையின் ஆட்சியர் மணிமேகலை ஆகியோர் பல்வேறு நடைமுறை பணிகளை முடித்து தற்போது கரும்பு அறவைப்பணிக்கு சர்க்கரை ஆலையை தயார் நிலையில் வைத்துள்ளனர்.இந்நிலையில் இந்த ஆலையின் எல்லைக்குள் உள்ள 6,517 ஏக்கரில் நடப்பட்டுள்ள கரும்பு பெறப்பட்டு இந்தாண்டு அறவைப்பருவத்தில்  இரண்டரை லட்சம் டன் கரும்பு அறவை செய்ய நிர்வாககுழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.அதன்படி வருகிறது டிசம்பர் மாதம் 12ந்தேதியன்று ஆலையின் கரும்பு அறவை துவங்குகிறது.இது நடப்பு பருவ மழைநிலையை முன்னிட்டு ஓரிருநாள் காலதாமதம் ஏற்படவும் வாய்ப்புள்ளது எனவும் சர்க்கரை ஆலையின் தலைவரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி கரும்பு அறவைப்பணி துவக்கத்தின் முன்னோட்டமாக ஆலையில் உள்ள இயந்திரங்கள் இயக்கம் ஆரம்பிப்பதற்கான இளஞ்சூடேற்றும் விழா சர்க்கரை ஆலையில் நேற்று நடைபெற்றது.இதில் தலைவர் கானூர் பாலசுந்தரம் தலைமை வகித்தார்.ஆலையின் ஆட்சியர் மணிமேகலை முன்னிலை வகித்தார்.பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் யாகம்,சிறப்பு வழிபாடு என பல்வேறு பூஜைகள் நடைபெற்று ஆலையின் கொதிகலனில் நெருப்பேற்றி சூடாக்கப்பட்டு சர்க்கரை ஆலையின் இளஞ்சூடேற்று விழா நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் இயக்குநர்கள் சிவக்குமார்,ஆதிமூலம்,நிர்வாககுழு இயக்குநர் இளஞ்செழியன்,ஆலையின் தலைமை கரும்பு அலுவலர் மணிமாறன்,அலுவலக மேலாளர் முனியம்மா,சேத்தியாத்தோப்பு இந்தியன் வங்கி மேலாளர் முத்தையா, மாணிக்கராஜ்,தலமை பொறியாளர் செங்குட்டுவன்,செல்வேந்திரன்,தொழிலாளர் நல அலுவலர் பன்னீர்செல்வம்,மாநில சர்க்கரைப்பிரிவு செயலாளர் சண்முகம்,அண்ணா தொழிற்சங்க தலைவர் சம்பத்குமார்,செயலாளர் மாரியப்பன்,மற்றும் பல்வேறு கூட்டுறவு சங்க தலைவர்கள்,நிர்வாககுழு இயக்குநர்கள்,கரும்பு விவசாயிகள்,ஆலையின் அனைத்து தொழிலாளர்கள் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.