சேத்தியாத்தோப்பு அருகே பின்னலூர் கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் குடிநீர்மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே பின்னலூர் கிராமம் உள்ளது.இது புவனகிரி மேற்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சி ஆகும்.இங்குள்ள சிவன்கோவில் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள குடிநீர்மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியானது இடிந்து விழும் நிலையில் இருக்கிறது.மேலும் இந்த குடிநீர்த்தேக்க தொட்டியானது அதன் மேல் மூடப்பட்டிருந்த சிமெண்ட் சிலாப் இடிந்து குடிநீர் தொட்டிக்குள்ளே விழுந்துவிட்டதால் குடிநீர்த்தொட்டியின் மேல்பகுதி திறந்தே இருக்கிறது.இதனால் பறவைகளின் எச்சங்கள்,செத்த எலி,பாம்புத்தோல்,மற்றும் பாசிபடர்ந்தும் காணப்படுவதால் குடிநீர்த்தேக்க தொட்டியில் இருக்கும் குடிநீரானது குடிப்பதற்கே லாயக்கற்றதாக இருக்கிறது.இதுபோன்று சுமார் ஒரு லட்சம் கொள்ளலவு லிட்டர் கொண்ட இந்த குடிநீர்த்தேக்க தொட்டியானது சுத்தம் செய்து பல ஆண்டுகள் ஆகிறது.குடிநீர்த்தேக்க தொட்டியிலிருந்து தற்போது கிராமமக்களுக்கு குடிநீர் விநியோகம் நடந்து வருகிறது.தொற்று நோய்கள் ஏற்படக்காரணமாகவும்,பல உடல்நலக்கோளாறுகளை ஏற்படுத்தும் விதமாக இருக்கும் இந்த தண்ணீரைத்தான் கிராமமக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.தற்போது இந்த குடிநீர்மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியானதுபழுதடைந்து அதன் பில்லர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது மற்றும் பல பகுதிகளில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்தும் விழுந்துள்ளது.குடியிருப்புக்கள் ,பேருந்து நிறுத்தம்,நூலகத்திற்கு அருகில் இந்த குடிநீர்மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிஇருப்பதால் எப்போது வேண்டுமனாலும் இந்த மேல்நிலை தொட்டியானது இடிந்துவிழும் என்று பின்னலூர் கிராமமக்கள் அச்சத்துடன் தெரிவித்தனர்.இதனை முழுவதுமாக இடித்து அகற்றிவிட்டு புதியதாக மேல்நிலை குடிநீர்த்தேக்க தொட்டியை கட்டவேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடமும்,புவனகிரி மேற்கு ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடமும் தெரிவித்தும் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை.இதுபோன்று இதன் அருகில் உள்ள விஏஓ கட்டிடமும் எப்போது வேண்டுமனாலும் இடியும் நிலையில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்துவிழுந்து வருகிறது.இதனையும் மாற்றி புதிய கட்டிடம் கட்டவேண்டும்.இப்பகுதியில் இரவு நேரங்களில் மர்மநபர்கள் மது அருந்தும் பாராக பயன்படுத்துவதால் இவ்விடம் முழுவதும் பிளாஸ்டிக்குப்பைகளால் துர்நாற்றம் வீசுவதாகவும்,அருகிலுள்ள குடியிருப்புகளில் உணவருந்த முடியாத நிலையிலும் உள்ளது.அதிகாரிகள் விரைந்து இந்த குடிநீர்மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியையும்,விஏஓ கட்டிடத்தையும் இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டவேண்டும் எனவும்,இப்பகுதியில் மர்மநபர்கள் மதுகுடிக்கும் பாராக பயன்படுத்தி வருவதால் பிளாஸ்டிக்குப்பைகள்,மதுபாட்டில்கள் சேர்ந்து சுற்றுப்புறச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதோடு அருகிலுள்ள குடியிருப்புகளுக்கு பெருந்தொந்தரவாகவும் இருக்கிறது என இங்குள்ளவர்கள் வேதனையோடு தெரிவித்தனர்.
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...