உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Monday, November 26, 2018

சேத்தியாத்தோப்பு முத்து சில்க்ஸ் ஜவுளிக்கடையில் தீபாவளி சிறப்பு குலுக்கல்











கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு தெற்கு மெயின்ரோட்டில் முத்து சில்க்ஸ் ஜவுளிக்கடை அமைந்துள்ளது.இக்கடையில் வருடந்தோறும் தீ
பாவளி திருநாளை முன்னிட்டு அழகான ஜவுளிகள் வாங்கும் அன்பார்ந்த வாடிக்கையாளர்களுக்கு தரமான அழகிய ஜவுளிகளோடு சிறப்பான பரிசுகளும் வழங்குவதும் வழக்கம்.சேத்தியாத்தோப்பு நகரில் கடந்த முப்பதாண்டுகளுக்குமேலாக தனக்கென்று தனித்துவமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ள முத்து சில்க்ஸ்சில் எண்ணற்ற ஏராளமான ஜவுளிகள் வாங்குவதில் அனைவருக்குமே தனி மகிழ்ச்சிதான்.தங்களது நிரந்தர வாடிக்கையாளர்கள் ஆயிரக்கணக்கில் இருந்த போதும் தினம்,தினம் புத்தம் புதிய வாடிக்கையாளர்கள் வந்தவண்ணம் இருப்பது முத்து சில்க்ஸ்சின் தனிச்சிறப்பு.ஒரு முறை வந்தால் மறுமுறை வரத்தூண்டும் கனிவான உபசரிப்பு.இப்படிப்பட்ட முத்து சில்க்ஸ் ஜவுளியின் தீபாவளி பரிசுகள் என்றால் சும்மாவா? இந்தாண்டு தீபாவளி சிறப்பு பரிசு குலுக்கல் அறிவிக்கப்பட்டதுமே அனைவருக்கும் மகிழ்ச்சிதான்.தீபாவளி இனிப்பு,புத்தாடை,மற்றும் முத்துசில்க்ஸ் புத்தம் புதிய ஜவுளிகள் என இரட்டை சந்தோஷத்தில் அனைவரும் திக்குமுக்காடிப்போனார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.இந்த 2018 ஆம் ஆண்டு தீபாவளி திருநாள் பரிசாக ரூ 500 ரூபாய்க்கு மேல் ஜவுளி வாங்கும் அனைவருக்கும் ஒரு பரிசுக்கூப்பன் வழங்கப்பட்டு முதல் பரிசு பஜாஜ் பைக்&1,இரண்டாம் பரிசு&கிரைண்டர்&1,மூன்றாம் பரிசு மிக்ஸி&1,நான்காம் பரிசுகுடம் &10,ஐந்தாம் பரிசு பிளாஸ்டிக்கூடை&100,ஆறாம் பரிசு&பிளாஸ்டிக் டப்&50 என வழங்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டது.இதனையடுத்து பல்லாயிரக்கணக்கானோர் நேரம் பார்க்காமல் தங்களுக்கான அழகிய தரமான ஆடைகளை எடுத்து மகிழ்ந்தனர்.அதன்படி தீபாவளி சிறப்பு குலுக்கலானது நவம்பர் &21&11&2018 அன்று குலுக்கல் விழா நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் சேத்தியாத்தோப்பு பேரூராட்சி முன்னாள் தலைவர் கேபிடி இளஞ்செழியன் தலைமை வகித்தார்.சேத்தியாத்தோப்பு நகர அதிமுக செயலாளர் எஸ்ஆர் மணிக்கண்டன், அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் மகாராஜன்,பொதுச்செயலாளர் மணிமாறன்,துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி,செயலாளர் ஆனந்தன்,கிஷோர்குமார்,மாவட்ட தலைவர் பக்கிரிசாமிஆகியோர்முன்னிலை வகித்தனர்.பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் அனைவருக்கும் முத்துசில்க்ஸ் உரிமையாளர் திருநாவுக்கரசு பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.பின்னர் நடைபெற்ற குலுக்கல் விழாவில் ஆயிரக்கானவர்களின் கூப்பன் தனித்தனியாக சுருட்பட்டு வைக்கப்பட்டு அனைத்தையும் குலுக்கி நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களில் சிலரை அழைத்து ஆயிரக்கணக்கான கூப்பன்களில் ஒவ்வொன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றியாளர்கள் உடனுக்குடன் அறிவிக்கப்பட்டார்கள்.இவ்வாறு அனைத்து பரிசுக்கான கூப்பன்களும் எவ்விதமான ஒளிவு மறைவு இல்லாமல் சரியாக பொதுமக்களின் முன்னிலையில் சேத்தியாத்தோப்பு முன்னாள் பேரூராட்சி மன்றத்தலைவர் கேபிடி இளஞ்செழியன் அவர்களின் கரங்களால் வழங்கப்பட்டது.இந்த பரிசுக்குலுக்கல் குறித்து முத்து சில்க்ஸ் உரிமையாளர் திருவுநாவுக்கரசு அவர்கள் தெரிவிக்கும்போது எங்களின் வாடிக்கையாளர்களால் நாங்கள் வளர்கிறோம்.அவர்களை எங்களால் முடிந்தளவு மகிழ்வித்து பார்க்கிறோம் என்று தெரிவித்தார்.