உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Tuesday, March 22, 2022

சேத்தியாத்தோப்பு அருகே என்எல்சி அதிகாரிகளை கிராம மக்கள் முற்றுகையிட்டு கடும் வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு





கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே கரிவெட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள நிலங்கள் குடியிருப்புகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மும்முடி சோழகன், கத்தாழை, கரிவெட்டி, கரைமேடு, கீழ் வளையமாதேவி மேல் வளையமாதேவி, சாத்தப்பாடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் என்எல்சி இரண்டாவது சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக நிலம்,மனை கையகப்படுத்தும் பணிகளை துவக்கி வருகின்றனர். இந்நிலையில் மேற்காணும் பகுதிகளில் கிராம மக்களிடம் சுமூகமான உடன்பாடு எட்டப்படாததால் என்எல்சி அதிகாரிகள் மற்றும் வருவாய்துறையினரை தங்கள் பகுதிக்குள வருவதை பல்வேறு கிராமத்தினர்
 தடுத்து வருகின்றனர்.. கிராம மக்கள் முக்கியமாக தெரிவிப்பதாவது நிலம் மனை கொடுக்கும் தங்களுக்கு வீட்டில் ஒருவருக்கு நிரந்தர அரசு வேலை, தற்போதைய நிலையில் அதிகபட்ச இழப்பீடு புதிய ஆர்எண்டார் பாலிசியின்படி உள்ள நிவாரணத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட அடிப்படை வாழ்வாதார தேவைகளை கோரிக்கையாக வைத்து பல கட்டங்களாக போராடி வருகின்றனர். இந்நிலையில் கரிவெட்டி கிராமத்திற்கு நிலம் அளவீடு செய்வதாக கூறி தமிழக வருவாய்த் துறை அதிகாரிகள், என்எல்சி அதிகாரிகள் ஆகியோர் போலீசார் பாதுகாப்புடன் வருகை தந்தனர். அப்போது கிராம மக்கள் அவர்களை தடுத்து முற்றுகையிட்டு, கிராமத்திற்கு உள்ளே விடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் திரும்பிச் செல்லுங்கள் எனக் கூறியதை அடுத்து இதனால் திடீரென அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதிகாரிகள் திரும்பி செல்லும் வழியை கிராம மக்கள் தடுத்து வண்ணம் இருந்தனர். பின்னர் போலீசார் அதிகாரிகளை கிராம மக்களிடம் இருந்து காப்பாற்றி அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது.

No comments:

Post a Comment