உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Thursday, March 24, 2022

பொதுமக்களை அச்சுறுத்தி வரும் பாழடைந்த செவிலியர் குடியிருப்பை இடித்து அகற்ற சேத்தியாத்தோப்பு பேரூராட்சி 15வது வார்டு குடியிருப்புவாசிகள் கோரிக்கை தேங்கிய சாக்கடை அகற்றாமலும், குடிநீர் கிடைக்காமலும் மக்கள் அவதி




கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பேரூராட்சி 15-வது வார்டில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த வார்டுக்கு செல்லும் வழியில
முகப்பில் சேதமடைந்த செவிலியர் குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் பயன்பாட்டில் இல்லாமல் இருந்து வருவதால் இந்த குடியிருப்புக்குள்ளே குடிமகன்கள் இரவு பகல் என பல நேரங்களிலும் அமர்ந்து மது அருந்தி அட்டகாசம் செய்து வருவதாக குடியிருப்பு வாசிகள் தெரிவிக்கின்றனர். மேலும் இக்கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுபோல் இப்பகுதியில் சாக்கடை நீர் தேங்கி வடிய வழியில்லாமல் குடியிருப்பு வாசிகளுக்கு நோய்த்தொற்று துர்நாற்றம், ஏற்பட்டு பல்வேறு உடல் உபாதைகளை தந்து வருகிறது. இது குறித்து பலமுறை  பேரூராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டையும் வைக்கிறார்கள். இங்கு வைக்கப்பட்டுள்ள மினி வாட்டர் டேங்கில் பல நாட்களாக குடிநீர் கிடைக்கவில்லை அதனால் அது வெறுமனே காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளது. தற்போது கோடை காலம் துவங்கி உள்ளதால்  மினி வாட்டர் டேங்கை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என தெரிவிக்கின்றனர். முக்கியமாக இப்பகுதியில் பன்றிகள் தொல்லை இருந்து வருவதாகவும் அதனால் பல்வேறு தொல்லைகளை அனுபவித்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர். உடனடியாக அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து இங்கு உள்ள பிரச்சனைகளை சரிசெய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

No comments:

Post a Comment