கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் எம்ஆர்கே கூட்டுறவு சர்க்கரை அமைந்துள்ளது.இந்த ஆலையின் நடப்பாண்டு கரும்பு அரவை துவக்கத்திற்கான இளஞ்சூடேற்று விழா சில நாட்களுக்கு முன்பு ஆலையின் தலைவர் கானூர் பாலசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.இந்நிலையில் ஆலையின் கரும்பு அரவை துவக்கம் நடைபெற உள்ள நிலையில் கரும்பு விவசாயிகள், அதிகாரிகள்,கரும்பு ஏற்றி வரும் டிராக்டர் ஓட்டுநர்கள் இணைந்த ஆலோசனை கூட்டம் நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு ஆலையின் தலைவர் கானூர் கோ.பாலசுந்தரம் தலைமை வகித்தார்.கூட்டுறவு சர்க்கரை ஆலை துணைத்தலைவர் விநாயகமூர்த்தி,அலுவலக மேலாளர் முனியம்மாள்,மேலாண் இயக்குனர் சுப்ரமணியன்,தலைமை கரும்பு அலுவலர் மணிமாறன்,நிர்வாக இயக்குனர்கள் சிவக்குமார்,குணசேகரன்,சக்திவேல்,ஆதிமூலம்,விவசாயசங்க நிர்வாகிகள் விஜி சிட்டிபாபு,அப்பாதுரை,ராமசாமி, வீரசோழன்,இளவரசன்,அதிமுக ஒன்றிய செயலாளர்கள் ஜோதிபிரகாஷ்,கலியமூர்த்தி, உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் தற்போது துவங்கவுள்ள கரும்பு அரவைக்கு கரும்பு வெட்டி அனுப்பும் விவாசாயிகள்,மற்றும் டிராக்டர் ஓட்டுநர்கள் உள்ளிட்டவர்களிடம் அரவைக்கான கரும்பு அனுப்புவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளதாவென கலந்தாலோசிக்கப்பட்டது.இதில் அவர்களின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டு நிர்வாகத்தின் மூலம் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.நடப்பு கரும்பு அரவையான எதிர்ப்பார்த்துள்ள இலக்கான 3லட்சம் டன் கரும்பு அரவைக்கு அனைவரும் சேர்ந்து ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.இதில் கரும்பு அலுவலர்கள் ரவிகிருஷ்ணன், ராஜதுரை,பொறியாளர் செல்வேந்திரன்,விவசாய சங்கத்தின் சார்பில் குஞ்சிதபாதம்,வைத்தியநாதசாமி,உள்ளிட்ட ஏராளமானவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...
No comments:
Post a Comment