தமிழகத்தில் நூற்றுக்கணக்கான மண்பாண்ட தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள்.இந்நிலையில் இவர்களுக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மழைக்கால பராமரிப்பு உதவித்தொகையாக ரூ.4000 வழங்கினார்.பின்னர் தற்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அதனை உயர்த்தி ரூ.5000 மாக வழங்கி வருகிறார்.இவ்வாறன சூழலில் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு தற்போதைய காலநிலையை கருத்தில் கொண்டு மழைக்கால பராமரிப்பு உதவித்தொகை ரூ.5ஆயிரத்திலிருந்து உயர்த்தி ரூ.25,000 வழங்கவேண்டும்,விடுபட்டவர்களுக்கும் உதவித்தொகை வழங்கவேண்டும்எனவும், அனைவருக்கும் மண்பாண்டத்தொழிலை செய்வதற்கு மின்சக்கரம் வழங்கவேண்டும் எனவும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மாவட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் சார்பாக திருநீலக்கண்டர் கட்டுமானத்தொழிற்சங்கம், அனைத்து குலாளர் மக்கள் இயக்கம் சார்பில் பொதுச்செயலாளர் ராஜா தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர்கபிலை சந்தித்து மனு அளித்தனர்.மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் நிலோபர்கபில் இதனை மாண்புமிகு தமிழக முதல்வரிடம் தெரிவித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
No comments:
Post a Comment