Saturday, November 28, 2020
சேத்தியாத்தோப்பு அருகே பெரியகுப்பம் கிராமத்தில் கடந்த பத்தாண்டுகளாக மழைத்தண்ணீர் தேங்கி நிற்கும் நிலை நடவடிக்கை எடுக்க கோரிக்கை
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது வீரமுடையாநத்தம் ஊராட்சி இந்த ஊராட்சிக்கு உட்பட்டது பெரியகுப்பம் கிராமம்.இக்கிராமத்தில் 9வது வார்டில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள்.இவர்கள் வசிக்கும் தெருவில் தற்போதைய கன மழையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.இதனை வெளியேற்றி தரவேண்டும் என பலமுறை ஊராட்சி நிர்வாகம், அதிகாரிகளிடத்தில் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கிராமமக்கள் தெரிவித்தனர்.தங்களது தெருவில் தேங்கி நிற்கும் தண்ணீரால் பல்வேறு தொல்லைகள் ஏற்படுகிறது எனவும், நோய்த்தோற்று ஏற்பட்டு உடல்நலக்கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.பெரியகுப்பம் 9வது வார்டில் மழைத்தண்ணீர் தேங்காதவாறு தரமான மேடான சாலை அமைத்து தந்தால் இந்த பிரச்னை ஏற்படாது என அவர்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர்.இதுகுறித்து புவனகிரி வட்டார வளர்ச்சி அதிகாரி வட்டார ஊராட்சி சக்தியிடம் தெரிவித்தபோது உடனடியாக நடவடிக்கை எடுத்து பெரியகுப்பம் 9வது வார்டு கிராமமக்களின் விருப்பத்தின்படி தரமான சாலை அமைத்து மழைநீர்தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...
No comments:
Post a Comment