கடலூர் மாவட்டம் புவனகிரியில் புவனகிரி நகர அதிமுக சார்பில் இளைஞர்-இளம்பெண்கள் பாசறை புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.இதில் புவனகிரி நகர செயலாளர் செல்வகுமார் தலைமை வகித்தார்.மாவட்ட அம்மாபேரவை உமாமகேஸ்வரன்,ரவிச்சந்திரன்,மாவட்ட துணைசெயலாளர் முருகுமணி,மாவட்ட இணைச்செயலாளர் செஞ்சிலட்சுமி,இளங்கோவன், மாவட்ட அண்ணாதொழிற்சங்க இணைச்செயலாளர் லெனின்,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டுறவு சங்க செயலாளர் ஜெயராஜ் வரவேற்றார்.நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் அருண்மொழித்தேவன் இளைஞர்-இளம்பெண்களிடையே சிறப்புரையாற்றி புதிய பாசறை உறுப்பினர் சேர்க்கையை துவக்கி வைத்தார்.மேலும் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் கலைச்செல்வன், புவனகிரி அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சீனுவாசன்,ஒன்றியக்குழு துணைத்தலைவர் வாசுதேவன்,கூட்டுறவு சங்க துணைத்தலைவர் இளங்கோ,கூட்டுறவு சங்க தலைவர் சரவணன்,முன்னாள் கவுன்சிலர் நாகராஜன்,ஒன்றிய கவுன்சிலர் தங்கமணி,மாணவரணி துணைத்தலைவர் வீரமூர்த்தி,இங்கர்சால்,மனோகரன்,உள்பட ஏராளமானவர்கள் பாசறை முகாமில் பங்கேற்றனர்.முடிவில் அதிமுக கழக நிர்வாகி ஜெயராஜ் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment