உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Sunday, September 20, 2020

2.30 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள துணை மின்நிலையத்தின் திறன்மாற்றியை முதல்வர் காணொளியில் திறந்து வைப்பு விவசாயிகள் தமிழக முதல்வருக்கு பாராட்டு

 




கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே முகந்தரியாங்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ளது 110/33.11 கி.வோ துணை மின்நிலையம்.இந்த துணைமின்நிலையத்தில் புதியதாக 2.30 கோடி மதிப்பில் எம்விஏ திறன் கொண்ட திறன்மாற்றியை மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொளிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.இதற்கென நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக புவனகிரி ஒன்றிய பெருந்தலைவர் தலைமை வகித்து சிவப்பிரகாசம் குத்துவிளக்கேற்றினார்.மின்துறை அதிகாரிகள் கடலூர் மின்பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் சத்தியநாராயாணன்,சிதம்பரம் செயற்பொறியாளர் ஜெயந்தி,அதிமுக கழக நிர்வாகிகள் ஜெயசீலன்,வேல்முருகன்,பிரித்திவி,முருகேசன்,கோவிந்தராசு, வீராசாமி,ராமலிங்கம்,மோகன்,பட்டுசாமி,உதவி செயற்பொறியாளர் அசோக்பிரசன்னா,உதவி மின்பொறியாளர் கணேசன்,
விவசாயிகள், என ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.புதிய திறன்மாற்றியினால் எறும்பூர்,தர்மநல்லூர்,வளையமாதேவி உள்ளிட்ட பத்துக்குமேற்பட்ட கிராமங்களில் தடையற்ற மின்சாரம் கிடைக்கும்.பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும் என்பதால் மகிழ்ச்சியடைந்துள்ள விவசாயிகள் தமிழக முதல்வருக்கு தங்களது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

 



No comments:

Post a Comment