கடலூர் மாவட்டம் புவனகிரி ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய அலுவலகத்தில் கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சாகமூரி ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வுக்கு வருகை தந்த மாவட்ட ஆட்சியரை புவனகிரி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சி.என்.சிவப்பிரகாசம்,துணைச்சேர்மன் வாசுதேவன்,வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சக்தி,பிரேமா ஆகியோர் வரவேற்றனர்.பின்னர் பருவமழைக்கால பேரிடர் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த முன்னேற்பாடுகளை கேட்டறிந்தார்.திடீர் உடைப்பு ஏற்படும் இடங்களில் மணல்மூட்டைகளை வைத்து உடைப்பு சரிசெய்வதற்கு ஏற்றவாறு மணல்மூட்டைகள் அடுக்கும்பணி, மரக்கிளைகளை வெட்டி அகற்றும் கருவிகள்,சுகாதாரத்துறையினர் நோய்த்தடுப்பு கருவிகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார்.இதன்பின்பு கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு வருகை தந்த மாவட்ட ஆட்சியரை கீரப்பாளையம் ஒன்றிய பெருந்தலைவர் கனிமொழிதேவதாஸ் படையாண்டவர் வரவேற்றார்.துணைச்சேர்மன் காஷ்மீர்செல்வி விநாயகமூர்த்தி,வட்டார வளர்ச்சி அதிகாரிகள் பாலகிருஷ்ணன்,விமலா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் பருவமழைக்கால பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து செய்துள்ள பல்வேறு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியர் கிராமப்புற பகுதியில் செய்யவேண்டிய பணிகள்குறித்து கிராமமக்கள் சார்பாக வைக்கப்பட்ட கோரிக்கைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என உறுதியும் அளித்தார்.
No comments:
Post a Comment