கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே மணவெளி கிராமம் உள்ளது.இக்கிராமத்தில் உள்ள ஐயனார்கோவில் வளாகத்தில் அதிமுக இளைஞர்-இளம்பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.கடலூர் மேற்கு மாவட்டத்தின் சார்பில் நடைபெற்ற முகாமில் அதிமுக கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழித்தேவன் தலைமை வகித்தார்.அதிமுக புவனகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் சீனுவாசன் வரவேற்றார்.புவனகிரி ஒன்றிய பெருந்தலைவர் சி.என்.சிவப்பிரகாசம்,துணைத்தலைவர் வாசுதேவன்,
மாவட்ட அம்மாபேரவை செயலாளர் உமாமகேஸ்வரன்,மாவட்ட துணைசெயலாளர் முருகுமணி ,ஆதனூர் முன்னாள் ஊராட்சி செயலர் ஜெயசீலன்,
புவனகிரி நகரகழக செயலாளர் செல்வகுமார்,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இளைஞர்-இளம்பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்க்கை முகாமை துவக்கி வைத்து பேசிய கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழித்தேவன் பேசும்போது அதிமுகவில் மட்டும்தான் சாதாரண மனிதரும் சாதனையாளராக மாறமுடியும்.அதுபோல் எளியநிலையில் உள்ள எவருக்கும் அதிமுகவில் எந்த உயர்ந்த நிலைக்கும் வரமுடியும்.கடின உழைப்பு உற்சாக செயலாற்றும் திறன் இருப்பவர்கள் அதிமுகவில் உயருகிறார்கள்.திமுகவில் அது கிடையாது.திமுக என்பது குடும்பக்கட்சி.அதில் இருப்பவர்கள் அவர்களுடைய கூடப்பிறந்தவர்கள்,சொந்தக்காரர்கள் எனதான் உள்ளனர்.எளியவர்களால் எதுவும் செய்ய இயலாது.அதனால் இன்று இங்கு வந்திருக்கும் இளைஞர்கள்,இளம்பெண்கள் அனைவரும் உங்களை பாசறையில் இணைத்துக்கொண்டு மக்கள் தொண்டாற்றிடுங்கள். நாலுபேருக்கு உதவிடும் மகத்தான் எதிர்காலம் இருக்கிறது என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் வீடுகட்டுவோர் கூட்டுறவு சங்க செயலாளர் ஆண்டவர்செல்வம்,ஒன்றியக்குழு உறுப்பினர் பவானி தங்கமணி,ஒன்றியக்குழு உறுப்பினர் லதாராஜேந்திரன்,ராமதாஸ், மாவட்ட அண்ணாதொழிற்சங்கம் லெனின்,கூட்டுறவு சங்க தலைவர் சுந்தரமூர்த்தி,ஒன்றிய கழக அவைத்தலைவர் செல்வராசு, உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் இம்முகாமில் வருகை தந்து பங்கேற்றனர்.புவனகிரி,மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச்சேர்ந்த ஏராளமான இளைஞர்களும்,இளம்பெண்களும் உற்சாக அதிமுக இளைஞர்-இளம்பெண்கள் பாசறையில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
No comments:
Post a Comment