தற்போது தமிழகத்தில் கொரானோ நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசும், மருத்துவர்களும் போர்க்கால அடிப்படையில் செய்து வருகிறார்கள்.அரசு அனைவரையும் கட்டாயம் முககவசம் அணிந்து செல்லவேண்டும், பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றவும் அறிவுறுத்தியும் வருகிறது.நமது கவனமான பாதுகாப்பு நமக்கு கொரானோ நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்கும்.இவ்வாறான நிலையில் பொதுமக்கள் பலர் முககவசம் அணிந்து செல்கிறார்கள்.இது ஒருபக்கம் இருந்தாலும் பலர் மிகப்பெரிய தவறு ஒன்றினை செய்கிறார்கள்.ஆம் அவர்கள் அணியும் முககவசத்தை முறைப்படி அப்புறப்படுத்தாமல் நடுத்தெருவில், சாலைகளில்,பொது இடங்களில் அப்படியே போட்டுச்செல்கிறார்கள்.நமது பகுதியில் இதுபோன்று அதிகம் பார்க்கமுடிகிறது.
இது எவ்வளவு பெரிய ஆபத்து தெரியுமா? விபத்தை நாம் விலைகொடுக்காமலே வாங்குகிறோம்.பொது இடங்களில் ஒருவர் அணிந்த மாஸ்க்கை போட்டுவிட்டு செல்லும் போது பலரும் அதனை அறிந்தோ, அறியாமலோ மிதிக்கநேரிடுகிறது.குழந்தைகள் அதன் ஆபத்து தெரியாமல் கைகளால் தொடவும் செய்யலாம்.இவ்வாறு பயன்படுத்தப்பட்ட மாஸ்க் பொதுவெளியில் விட்டுச்செல்லும்போது அது இன்னொரு பேராபத்தை நமக்கு ஏற்படுத்தும் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.அதனால் நீங்கள் பயன்படுத்திய மாஸ்க்கை பொதுவெளியில் விட்டுச்செல்லாமல் அதனை பத்திரமாக வீட்டுக்குசென்று அதனை எரித்துவிடுங்கள் என மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள்.நிச்சயம் நீங்கள் அவ்வாறு செய்தால் அனைவருக்கும் அது பேருதவியாக இருக்கும்.