உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Saturday, July 4, 2020

புவனகிரியில் வெற்றிலைக்கடைக்காரருக்கு கொரானோ தொற்று ஏற்பட்டதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்




கடலூர் மாவட்டம் புவனகிரி கடைத்தெருவில் வெற்றிலைக்கடைக்காரருக்கு மருத்துவ பரிசோதனையில் கொரானோ தொற்று உறுதி செய்யப்பட்டது.இதனையடுத்து அவர் ஆம்புலன்ஸ்மூலம் சிதம்பரம் கொரானோ வார்டுக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார்.இந்நிலையில் நகரின் பரபரப்பான இடத்தில் அவர்கடை இருந்ததால் புவனகிரி பேரூராட்சித்துறை செயல்அலுவலர்திருஞானசம்பந்தம்,வட்டாரமருத்துவ அலுவலர் டாக்டர்சிவக்குமார்,சுகாதார ஆய்வாளர் தனசேகரன்,லஷ்மிநாராயணன்,டாக்டர் ஜானகிராமன், புவனகிரி பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் உள்ளிட்ட   அதிகாரிகள் அவரது கடையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என நோட்டீஸ் ஒட்டினர்.மேலும் அப்பகுதியில் வேறு யாரும் செல்லாதவாறு தடுப்புக்களை ஏற்படுத்தினர்.தொடர்ந்து நகரம் முழுவதும் கிருமிநாசினி மருந்து,பிளிச்சீங் பவுடர் தெளிக்கப்பட்டது.பின்னர் கிருஷ்ணாபுரம் வட்டார மருத்துவ துறை அதிகாரிகள் நடமாடும் கொரானோ நோய்த்தொற்று பரிசோதனை வெப்பமானி கருவி மூலம் பொதுமக்களுக்கு பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.வணிக நிறுவனங்கள்,பொது இடங்களில் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றவும், முககவசம் அணியவும் அறிவுறுத்தியும் வருகிறார்கள்.