உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Sunday, July 5, 2020

சிதம்பரம் டிஎஸ்பி கார்த்திக்கேயன் புவனகிரியில் ஆய்வு



தமிழகத்தில் கொரானோ நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் ஜூலை  மாதம் வருகின்ற அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தி உள்ளதாக அறிவிப்பு செய்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்று தமிழக அரசின் அறிவிப்பிற்கு பாராட்டுக்கள் தெரிவித்தனர். அதன்படி ஜூலை மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமையான இன்று கடலூர் மாவட்டம் புவனகிரி, கீரப்பாளையம் ஆகிய பகுதிகளில் சிதம்பரம்  டிஎஸ்பி கார்த்திக்கேயன் ஆய்வுகள் மேற்கொண்டார்.அனுமதிக்கப்பட்ட வாகனங்களை தவிர மற்ற வாகனங்கள் திருப்பி அனுப்பபட்டன.சாலைகளில் தேவையின்றி சுற்றித்திரிந்தோருக்கு கடுமையாக எச்சரிக்கை விடுத்த டிஎஸ்பி கார்த்திக்கேயன்,அரசு விடுத்துள்ள முழு ஊரடங்கு உத்தரவுக்கு அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.முககவசம் அணியாமல் சென்றவர்களுக்கு கொரானோ நோய்த்தொற்றின் பாதிப்பை எடுத்துக்கூறி அனைவரும் முககவசம் அணிவது அவசியம் எனவும் விளக்கமளித்தார்.இந்நிகழ்ச்சியில் புவனகிரி காவல் ஆய்வாளர் ராபின்சன், எஸ்ஐ சந்தோஷ், உள்ளிட்ட ஏராளமான போலீசாரும் உடனிருந்தனர்.இதுபோல்
சேத்தியாத்தோப்பு பகுதியில் தமிழக அரசின் முழு உத்தரவை ஏற்று அனைத்து வணிகர்களும் தங்களது கடைகளை உற்சாகத்தோடு அடைத்து முழு ஒத்துழைப்பு அளித்திருந்தனர். அதுபோல பொதுமக்களும் அரசு அறிவிப்பின்படி வீட்டிலேயே இருங்கள், விலகி இருங்கள் என்பதை ஏற்று இன்றைய முழு ஊரடங்கு உத்தரவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். நகரில் அனுமதிக்கப்பட்ட வாகனங்களைத் தவிர மற்றவை திருப்பி அனுப்பப்பட்டன.