உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Sunday, June 7, 2020

புவனகிரி பகுதியில் அரசு தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் விரைந்து செயல்பட கோரிக்கை



கடலூர் மாவட்டம் புவனகிரி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தோட்டக்கலைத்துறை பயிர்வகை பயிர்களான கத்திரி,வெண்டை,கொத்தவரை, முருங்கை, வெள்ளரி,தேக்கு, வாழை, மல்லி,அரும்பு,கனகாம்பரம், ரோஜா பூவகை உள்ளிட்ட பல்வேறு தோட்டக்கலைத்துறை பயிர்களை பயிர்செய்து வருகிறார்கள்.இந்நிலையில் இப்பயிர்களை மண்ணின் தன்மைக்கு ஏற்பவும்,நல்ல வருவாய் கிடைப்பதாலும் இங்குள்ள ஏராளமான விவசாயிகள் பயிர்செய்து வருகிறார்கள்.இந்நிலையில் தோட்டக்கலைத்துறை அறிவுறுத்தல்படி பயிர்செய்யவேண்டிய விவசாயிகள் போதிய வழிக்காட்டல் இல்லாமல் திணறிவருகிறார்கள்.நீண்டகாலமாக தங்களின் அனுபவத்தில் இவ்வகை பயிர்களை பயிர்செய்து வந்தாலும் மேற்கொண்டு விவசாயிகள் செய்யவேண்டியவற்றை அரசு தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தங்களுக்கு சரியாண ஆலோசனை வழங்குதில்லை என்று இப்பகுதி விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கிறார்கள்.பயிர்களில் பூச்சித்தாக்குதல், பயிர்பராமரிப்பு மற்றும் விளைந்த பயிர்களை தற்போதைய கொரானோ காலக்கட்டத்தில் போதியமுறையில் சந்தைப்படுத்துதல் முடியாமல் தேக்கமடைதல் போன்ற காரணங்களால் தங்களுக்கு பெருத்த நஷ்டமடைவதாக தெரிவித்து வருகிறார்கள்.இதனைப்போக்க தோட்டகலைத்துறை அதிகாரிகள் தங்களுக்கு தக்கபடி ஆலோசனை வழங்கவேண்டும்.மத்திய,மாநில அரசுகள் தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகளுக்கு வழங்குகின்ற பல்வேறு உதவிகளை அதிகாரிகள் வெறும் அறிக்கைகளாக விடாமல் நேரடியாக பல்வேறு கிராமங்களில் விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்களை நடத்தி அதன் முழுபலனை விவசாயிகளுக்கு கிடைக்கசெய்யவேண்டும்.மேலும்
தாங்கள் பயிர்செய்துள்ள பயிர்களை எவ்வாறு சந்தைப்படுத்தவேண்டும் எனவும், நேரடி களஆய்வினை செய்து தங்களது அச்சத்தை போக்கி தங்களது விளைபொருட்களுக்கு நல்ல நிலையான விலைகிடைக்கவேண்டும் எனவும் அவர்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.