கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ளது கிருஷ்ணாபுரம் கிராமம்.இக்கிராமத்தில் உலக வங்கி திட்டங்களை செயல்படுத்துவதற்கான ஆய்வு நடைபெற்றது. கடலூர் மாவட்டத்தில் உலகவங்கி நிதி பங்களிப்புடன் தொடங்க உள்ள தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறை நீர்வள நிலவளத்திட்டம் நிதி&3ன்படி இந்த ஆய்வு நடைபெற்றது.இந்த ஆய்வினை கடலூர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக உதவி பேராசிரியர் காயத்திரி தலைமையில் சேத்தியாத்தோப்பு உதவி பொறியாளர் பார்த்திபன், புவனகிரி உதவி பொறியாளர் அருளரசன் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.இந்த ஆய்வின் நோக்கமானது தற்போதுள்ள சூழலில் இப்பகுதி விவசாயிகள் வழக்கமான விவசாயம், மற்றும் மாற்றுவழியில் தோட்டகலைப்பயிர்கள் சாகுபடி செய்தல்,மீன்வளர்த்தல், உள்ளிட்ட பல வருவாய் ஈட்டுவதற்கான சூழலை கண்டுபிடித்து அதனை விவசாயிகளுக்கு அறியவைத்தலுக்காக இந்த ஆய்வு செய்யப்பட்டு தகவல் பெறப்படுகிறது. அவ்வாறு பெறப்படும் தகவல்கள் தமிழக அரசின் மூலம் திட்டத்தை செயல்படுத்தும் உலக வங்கியின் பார்வைக்கு வைக்கப்படும்.பின்பு அந்த திட்டங்கள் செயல்வடிவத்துக்கொண்டு வரப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.அதன்படி
புவனகிரி அருகே உள்ள வாலாஜா ஏரி, பரவனாறு பாசன வடிகால் வாய்க்கால்களை சேர்ந்த பத்தாயிரம் ஏக்கர் விவசாய நில பரப்புகள், அங்குள்ள விவசாயிகள் என ஆய்வு செய்து அவர்களின் கருத்துக்களை ஆய்வுகுழுவினர் கேட்டறிந்தனர்.மேலும் இக்குழுவினர் வண்டுராயன்பட்டு,மிராளூர்,அம்பாள்புரம்,தலைக்குளம்,மருதூர்,கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ஆய்வு செய்துள்ளனர்.இப்பகுதி விவசாயிகள் தங்களின் கருத்துக்களை அதிகாரிகளிடம் எடுத்துரைத்தனர்.மேலும் தங்கள் பகுதி பாசன வடிகால் வாய்க்கால்களை தூர்வாரிட புதிய மனுக்களையும் அளித்தனர்.