உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Wednesday, July 1, 2020

துரிஞ்சிக்கொல்லையில் தனியார் மொபைல் டவர் அமைக்க கிராமமக்கள் எதிர்ப்பு



கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ளது துரிஞ்சிக்கொல்லை கிராமம்.இக்கிராமத்தில் வேளாங்கண்ணி என்பவரது இடத்தில் தனியார் மொபைல் டவர் அமைக்கும் பணிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.இதனையடுத்து அவ்விடத்தில் டவர் அமைப்பதற்கான கருவிகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கோயம்புத்தூரிலிருந்து கிராமத்திற்குள் வந்தது.உடனடியாக துரிஞ்சிக்கொல்லை கிராமத்தை சேர்ந்த முப்பதுக்குமேற்பட்டவர்கள் அதனை தடுத்து நிறுத்தினர். தனியார் மொபைல் டவரால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும்.சுற்றுப்புற சூழல் சீர்கேடு அடைந்து சிட்டுக்குருவி உள்ளிட்ட பறவையினங்களுக்கு பாதிப்பு ஏற்படும்.விவசாயம் பாதிக்கும் நிலை உள்ள்து.அதனால் டவரை ஊருக்கு வெளிப்பகுதியில் எங்காவது அமையுங்கள் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த சேத்தியாத்தோப்பு போலீசார் தனியார் மொபைல் டவர் அமைக்கும் நிறுவனத்தினரிடமும் மற்றும் கிராமமக்களிடமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.