உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Thursday, June 11, 2020

வீராணம் ஏரியின் ஷட்டர்களை பரிசோதிக்க விவசாயிகள் கோரிக்கை





கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வீராணம் ஏரியில் உள்ள ஷட்டர்களை பரிசோதிக்க விவசாயிகள் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.தமிழக முதல்வர் நாளை மேட்டூரில் குறுவை பாசனத்திற்கு விவசாயிகளுக்கு தண்ணீர் திறக்க உள்ள நிலையில் அந்த தண்ணீர் வீராணம் ஏரிக்கு வந்து சேர்வதற்குள் வீராணம் ஏரியில் உள்ள அனைத்து ஷட்டர்களையும் பரிசோதிக்க  வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.இது குறித்து விவசாயிகள் தெரிவிக்கையில் தமிழக   அரசு விவசாயிகளின் நலன் கருதி ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுகிறது.இந்நிலையில் தற்போது தமிழக முதல்வர் நாளை காலை பத்து மணியளவில் மேட்டூரில் குறுவை பாசனத்திற்கு தண்ணீர் திறக்க உள்ளார்.அவ்வாறு திறக்கப்படும் தண்ணீரானது சில நாட்களில் வீராணம் ஏரிக்கு வந்து விடும்.அப்படிப்பட்ட நிலையில் வீராணம் ஏரியில் உள்ள பத்துக்குமேற்பட்ட ஷட்டர்களை அதில் ஏதேனும் நீர்கசிவு உள்ளதா? பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும்போது சரியாக திறக்கமுடியுமா? கரையின் பலவீனமான பகுதியில் உடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளதா? ஏற்கெனவே அபாயகரமாக கண்டறியப்பட்டுள்ள பகுதியில் சரியாக முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா? பொதுப்பணித்துறை அதிகாரிகள் வீராணம் ஏரி ஷட்டர் மற்றும் தண்ணீர் வெளியேறும் பகுதிகளை ஆய்வு செய்யவேண்டும்.அவ்வாறு செய்யும்போது வீராணம் ஏரிக்குள் வரும் தண்ணீர் பாதுகாப்பாக தேக்கப்பட்டு சரியான சமயத்தில் விவசாயிகளுக்கு பயன்படுத்தமுடியும். தமிழக அரசு விவசாயிகளின் நலனை முன்னிட்டு எடுத்து வரும்  முயற்சியும் தக்கபடி பயனளிக்கும்படியாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்து அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் ஷட்டர்கள்,மற்றும் அபாயகரமான பகுதிகளை வீராணம் ஏரியின் முழுமைக்கும் ஆய்வு செய்யவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.