சேத்தியாத்தோப்பு அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி மேலான்மைக்குழு பயிற்சி.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு சந்தைதேயாப்பு செல்லும் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது.இப்பள்ளியில் கடலூர் மாவட்டம் புவனகிரி ஒன்றியம் மஞ்சக்கொல்லை குறுவள மையத்திற்கு உட்பட்ட 15 பள்ளிகளைச்சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலான்மக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி சேத்தியாத்தோப்பு அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெறறது.-இதில் மஞ்சக்கொல்லை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சம்பத்குமார், மற்றும் சேத்தியாத்தோப்பு அரசு உயர்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர் தமிழ்ச்செல்வி ஆகியோர் மேலான்மைபயிற்சிக்கூட்டத்தை துவக்கிவைத்து உறுப்பினர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள்.மேலும் சிறப்பான அறிவுரைகளை அரசுப்பள்ளியின் மேலான்மைக்குழு தலைவர் மணிமாறன்,சிறப்பு பட்டிமன்ற பேச்சாளர் பொற்செல்வி ஆகியோர் வழங்கினார்கள்.இப்பயிற்சியில் மஞ்சக்கொல்லை மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர் பயிற்றுநர் ஐசக்ஞானராஜ் மற்றும் சேத்தியாத்தோப்பு துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சேகர்,ஆசிரியர் துரைமணிராஜன் ஆகியோர் பள்ளி மேலான்மைக்குழு உறுப்பினர்களுக்கு பயிற்சியும்,ஆலோசனைகளையும் அளித்தனர்.இதில் பதினைந்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள்,மாணவர்களின் பெற்றோர் உள்ளிட்ட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
இதுபோல் சேத்தியாத்தோப்பு அரசு உயர்நிலைப்பள்ளயில் பள்ளி மாணவர்களுக்கான வருடாந்திர மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.இதில் கிருஷ்ணாபுரம் வட்டார மருத்துவ அலுவலர்கள் வருகை தந்து மாணவர்களின் உட்ல்நலன் குறித்து பரிசோதனை செய்து ஆலோசனையும் வழங்கினார்கள்.