உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Monday, January 13, 2020

தமிழக அரசு கரும்பு நிலுவைத்தொகை வழங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி



தமிழக அரசு கரும்பு நிலுவைத்தொகை வழங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் தமிழக அரசால் இயங்கும் எம்ஆர்கே கூட்டுறவு சர்க்கரை ஆலை அமைந்துள்ளது.கடந்த  இருபதாண்டுகளுக்குமேலாக இயங்கிவரும் இந்த சர்க்கரை ஆலையானது இப்பகுதி கரும்பு பயிரிடும் விவசாயிகளின் நலனைமுன்னிட்டு ஏற்படுத்தப்பட்டது.சிறப்பாக இயங்கி வரும் இந்த கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தற்போதை நடப்பு 2019-20 ஆண்டின் கரும்பு  அறவையானது கடந்த டிசம்பர் மாதத்தில் துவக்கப்பட்டது.நாளொன்றுக்கு 2500 டன் கரும்பு கரும்பு அறவை இலக்காக கொண்டு கரும்பு அறவையானது நடைபெற்று வருகிறது.இந்த கரும்பு அறவைப்பருவத்தில் மூன்று லட்சம் டன் கரும்பு அறவையை எதிர்பார்ப்பு இலக்காக கொண்டு தற்போது கரும்பு அறவை வேகமாக நடைபெற்று வருகிறது.இப்பகுதி மூன்றாயிரத்து ஐந்துநூறுக்குமேற்பட்ட  கரும்பு விவசாயிகள் பெரிதும் எதிர்பார்ப்போடு இந்த ஆலையைத்தான் தங்களின் வாழ்வாதாரமாக நம்பியிருக்கிறார்கள்.இவ்வாறான சூழலில் தற்போதைய பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆலோசனைக்கூட்டம் சர்க்கரை ஆலைவளாகத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் ஆலையின் தலைவர் கானூர் பாலசுந்தரம் தலைமை வகித்தார்.அப்போது சர்க்கரைஆலையின் தலைவர் அனைவரையும் வரவேற்று ஆலையின் நடப்பு நிலையை குறித்து தலைவர் விளக்கமளித்து பேசினார்.அதில் ஆலைக்கு தலைவராக தாம் பொறுப்பேற்று 2017-2018, 2018-2019 என இரண்டு ஆண்டுகளாகிறது.இக்காலக்கட்டத்தில் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு வழங்கவேண்டிய மத்திய அரசு வழங்குகின்ற பரிந்துரை விலை (எப்ஏபி), மற்றும் மாநில அரசு வழங்குகின்ற (எஸ்ஏபி) மாநில அரசு வழங்குகின்ற பாதுகாப்பு விலை அனைத்தும் தான் பதவியேற்ற இரண்டு வருடத்திற்குள் முழுமையாக வழங்கப்பட்டுள்ளது.ஏனெனில் கடந்த 2014-2015, 2015-2016,  2016-2017 ஆகிய மூன்று ஆண்டுகளில் கரும்பு விவசாயிகளுக்கு எஸ்ஏபி தொகை எதுவும் கொடுக்கப்படவில்லை.புதிய தலைவராக நான் பொறுப்பேற்றுக்கொண்டபின் கடந்த இரண்டு வருடத்தில் பாக்கியிருந்த அனைத்து நிலுவைத்தொகைகளும் தமிழக அரசிடம் சிறப்பு  கோரிக்கை  வைக்கப்பட்டு அதனடிப்படையில் நிதிப்பெற்று வழங்கப்பட்டுள்ளது.அதாவது 2014-2015 காலக்கட்டத்தில் வழங்கவேண்டிய தொகையை தமிழக அரசிடம் சிறப்பு நிதி பெற்று கரும்பு விவசாயிகளுக்கு வழங்க 8,03,56,000 ரூபாய் வங்கியின் மூலம் விவசாயிகளுக்கு வரவு வைக்கப்பட்டுள்ளது.அனைத்து கரும்பு வெட்டியனுப்பும் விவசாயிகளுக்கும் டன் ஒன்றுக்கு மத்திய அரசின் விலை ரூ. 2500 வழங்கப்பட்டு வருகிறது.இப்போதைய அறவைக்காலத்தில் கரும்பு அனுப்பிய அனைத்து  விவசாயிகளுக்கும் டிசம்பர் மாதத்திற்குள் முழுமையாக பணம் வழங்கப்பட்டுள்ளது.மேலும் கரும்பு அனுப்பும் விவசாயிகளுக்கு உடனடியாக பணம் வழங்குவதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தமிழக அரசின் சிறப்புத்திட்டமாக கரும்பு விவசாயிகளுக்கு சொடடுநீர் பாசனத்தை அறிமுகப்படுத்தி வருகிறோம். எதிர்காலத்தில் எளிமையாகவும் அதிக சர்க்கரை சத்துள்ள கரும்புகளை பயிரிட்டு விவசாயிகள் அதிக மகசூல் எடுக்கவேண்டும். தண்ணீர் சிக்கனத்தை கடைப்பிடித்து அனைத்து கரும்பு பயிரிடும் விவசாயிகளையும் சொட்டுநீர் பாசனத்தின் மூலம் கரும்பு பயிரிட அறிவுறுத்தல் வழங்கி வருகிறோம். இதற்காக நவீன முறையில் விவசாயிகளுக்கு பயிற்சியும் அளிக்க ஆலை நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு சொட்டுநீர் பாசனத்தின்மூலம் கரும்பு பயிரிடும் சிறுகுறு விவசாயிகளுக்கு தமிழக அரசு முழு மானியத்தை வழங்குகிறது.அதன்படி மண்ணுக்கு கீழ் முறையில் சொட்டுநீர் பாசனம் அமைக்க ரூ.1,49,367 ரூபாயும், மண்ணுக்கு மேல் முறையில் சொட்டுநீர் பாசனம் அமைக்க ரூ.1,37,844 ரூபாயும் தமிழக அரசு முழுமானியத்துடன் வழங்குகிறது.கரும்பு விவசாயிகள் இதனை சரியாக பயன்படுத்தி அதிக மகசூல் பெறவேண்டும்.சொட்டுநீர் பாசனத்தை கரும்பு விவசாயிகள் அமைப்பதால் கரும்பு விவசாயிகளுக்கு பொருள்மிச்சம்,ஆட்கள் குறைவு, குறைவான உரத்தேவை, குறைவான தண்ணீரைக்கொண்டு கரும்பு பயிரிடமுடியும் என்றும் சர்க்கரை ஆலையின் தலைவர் கானூர் பாலசுந்தரம் ஆலோனைக்கூட்டத்தில் விளக்கமளித்தார்.இந்த ஆலோசனைக்கூட்டத்தில் சர்க்கரை ஆலையின் அனைத்து துறை அதிகாரிகளும் உடனிருந்தனர்.இதனிடையே சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் சார்பில் சர்க்கரை ஆலையின் தலைவர் கானூர் பாலசுந்தரம் கரும்பு விவசாயிகள் உள்ளிட்ட அனைவருக்கும் தமிழர்திருநாளான பொங்கல் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.