கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ளது துணிசிரமேடு ஊராட்சி. இந்த ஊராட்சியில் நடைபெற உள்ள ஊராட்சி தலைவருக்கான போட்டியில் 8 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதில் 6 பேர் வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டது. மீதமுள்ள 2 பேர் மனு நிராகரிப்பு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த ஊராட்சியில் போலியான இரண்டு வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று கூறி அதனை நிராகரிக்க வேண்டுமென துணிசிரமேடு ஊராட்சி தலைவருக்கான வேட்பாளராக போட்டியிடும் தமயந்தியின் கணவர் ராஜேந்திரன் புகார் மனுவை கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தேர்தல் நடத்தும் அலுவலரான வட்டார வளர்ச்சி அதிகாரி பாலகிருஷ்ணனிடம் அளித்துள்ளார். அந்த மனுவில் அவர்
அதே ஊரை சேர்ந்த தலைவருக்கான வேட்பாளராக நிற்கும் தண்ணிமலை மனைவி கோவிந்தம்மாள் (வயது95). இவருக்கு
கையொப்பம் போடதெரியாது .ஆனால் இவர் அளித்துள்ள வேட்புமனுவில் கையொப்பம் போடப்பட்டுள்ளது எனவும், மேலும் கோவிந்தம்மாள் மகள்
ஆனந்தி செல்வராஜ் . இவரும் துணிசிரமேடு தலைவர் வேட்பாளராக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் இந்த மனுவும் போலியானது எனவும்.ஆனந்தி செல்வராஜ் திருமணம் முடிந்து நெய்வேலியில் இருப்பதாகவும் அவர் துணிசிரமேடு கிராமத்தின் ஊராட்சி தலைவர் வேட்பாளராக போட்டியிடுகின்றார். இப்படிப்பட்ட நிலையில் ஆனந்தி செல்வராஜுக்கு துணிசிரமேடு ஊரில் ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் பட்டியலில் அவர் பெயர் இல்லை, வீட்டு வரி ரசீது,கதவு எண்,முன்மொழிபவர் படிவம் உள்ளிட்ட இப்படி எதுவும் இல்லை.ஆனாலும் ஆனந்தி செல்வராஜ் தாசில்தாரிடம் கையொப்பம் பெற்று வந்து வேட்பாளர் மனுவை தாக்கல் செய்துள்ளார். என்று புகாராக தெரிவித்து உள்ளார். இதுபோல் அதே ஊரைச்சேர்ந்த அதிமுக முன்னாள் ஊராட்சிமன்றத்தலைவர்கூறும்போது துணிசிரமேடு ஊராட்சி திமுக கிளைக்கழக செயலாளர் சிவக்குமார் எப்படியாவது தான் ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு வரவேண்டும் என்பதற்காக தன்னுடைய அக்காள் ஆனந்தி செல்வராஜையும், தனது தாய் கோவிந்தம்மாள் ஆகியோரையும் பொய்யான ஆவணங்களை இணைத்து மனுதாக்கல் செய்துள்ளனர் என பகிரங்க குற்றச்சாட்டை வைத்தார். இதனிடையே கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமயந்தி ராஜேந்திரன் மற்றும் கோவிந்தம்மாள்,
ஆனந்தி செல்வராஜ் கோஷ்டிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் அவர்களை கலைந்து போக வைத்தனர்.மேலும் அதிகாரிகள் இது குறித்து தெரிவிக்கையில் போலியான வேட்பு மனு இருக்கிறதா என அது குறித்த ஆய்வுகள் செய்து வருவதாக தெரிவித்தனர்.