சேத்தியாத்தோப்பு அருகே வட்டத்தூர் கிராமத்தில் சாலையில் தண்ணீர்தேங்கியதால் பொதுமக்கள் வேதனை.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது வட்டத்தூர் கிராமம்.இக்கிராமத்தில் பேருந்து நிறுத்தத்திலிருந்து கிராமத்திற்குள் செல்லும் சுமார் மூன்று கிலோமீட்டர் தூரமுள்ள சாலை மிகவும் பழுதடைந்துள்ளது.சாலையில் கற்கள் பெயர்ந்து பொதுமக்கள் நடந்து செல்வதற்கு ஆபத்தான நிலையில் இருந்து வருகிறது.கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக சேதமடைந்து உள்ள வட்டத்தூர் கிராம சாலையின் வழியாக தினசரி நூற்றுக்குமேற்பட்ட பள்ளி,கல்லூரி செல்லும் மாணவர்கள் நடந்து சென்று பேருந்து நிறுத்தம் செல்கிறார்கள்.மேலும் இந்த சாலையின் வழியாக இருசக்கர வாகனங்கள்,உழவு வாகனங்கள்,அவசரகால வாகனங்களான ஆம்புலன்ஸ்,தீயணைப்பு வாகனம் போன்ற பலவும் சிரமமப்பட்டே சென்றுவருகின்றன.மேலும் மழைக்காலத்தில் சேதமடைந்த சாலையில் தண்ணீரும் தேங்குவதால் பள்ளி,கல்லூரி செல்லும் மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் என பலரும் நோய்த்தொற்றுக்கு ஆளாகி பாதிப்படைகின்றனர்.இந்த சாலையை சீரமைத்து தரமாக அமைத்து தரவேண்டும் என ஒன்றிய அதிகாரிகளுக்கும்,மாவட்ட நிர்வாகத்திற்கும் பலமுறை கோரிக்கை வைத்தும் அவர்கள் இன்னமும் சரிசெய்யாமல் இருப்பதாக இக்கிராமமக்கள் தெரிவித்தனர்.சாலையில் தேங்கி நிற்கும் மழை நீர் வடியாமல் இருப்பதால் இதிலிருந்து அதிகமாக கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதியிலுள்ள குடியிருப்பு வாசிகளை பெரும் தோந்தரவு செய்து வருவதாக தெரிவித்தனர்.நீண்டகாலமாக சேதமடைந்துள்ள வட்டத்தூர் கிராம சாலையை விரைந்து அதிகாரிகள் ஆய்வு செய்து தரமான சாலையாக அமைத்து தரவேண்டும் என வட்டத்தூர் கிராமமக்கள் தமிழக அரசுக்கும்,அதிகாரிகளுக்கும் கோரிக்கை வைத்தனர்.
Saturday, November 2, 2019
வட்டத்தூர் கிராமத்தில் சாலையில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் வேதனை

-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் எம்ஆர்கே கூட்டுறவு சர்க்கரை ஆலை கடந்த இருபதாண்டுகளுக்கும்மேலாக செயல்பட்டு வருகிறது.சேத்தியாத்தோப்பு,...
-
சேத்தியாத்தோப்பு அருகே வலசக்காடு கிராமத்தில் ஆழ்துளை கிணற்றை மூடிய எஸ்ஐக்கு பொதுமக்கள் பாராட்டு.தமிழகத்தில் மீண்டும் ஒரு துயரமான ஆழ்து...