சேத்தியாத்தோப்பு அருகே நந்தீஸ்வரமங்கலம் கிராமத்தில் நெல்பயிர் தண்ணீரில் மூழ்கியதால் வடிகால் வசதி செய்து தரகோரிக்கை. உள்ளது.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே நந்தீஸ்வரமங்கலம் கிராமம் உள்ளது.இக்கிராமத்தில் தற்போதைய பருவமழையில் வடிகால் வசதியில்லாததால் சுமார் ஆறு ஏக்கருக்குமேல் உள்ள நேரடி நெல்விதைப்பு செய்யப்பட்ட வயல் முழுவதும் மழையின்போது தண்ணீர்தேங்கி வடிகால் வசதியில்லாததால் அழுகிப்போய் உள்ளது.இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறும்போது நந்தீஸ்வரமங்கலம் கிராமத்தில் சுமார் மூன்று கிலோமீட்டர் தூரமும் 17மீட்டர் நீளமும் உள்ள பாசன வடிகால் வாய்க்கால் கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாக இப்பகுதி விவசாயிகளுக்கு பாசனவடிகாலுக்கு பயன்பட்டுவந்தது.தற்போது இந்த வடிகால் வாய்க்கால் போதிய பராமரிப்பு இல்லாமல்போனதால் இதன் அகலமானது சாதாரணமாக இரண்டுமீட்டர் அளவுக்கு சுருங்கிப்போய் தூர்ந்துவிட்டது.அதனால் இப்பகுதியில் உள்ள நூறு ஏக்கருக்குமேல் உள்ள விவசாய விளைநிலங்களுக்கு போதுமான பாசன வசதி இல்லாமல் பெரும் சிரமம் அடைந்து வருகிறார்கள்.ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக்காலத்தில் இங்குள்ள விவசாயிகள் படும்வேதனை சொல்லிமாளாது அவ்வளவு துயரினை அடைந்து வருகிறார்கள்.தற்போது இப்பிரச்னைக்கு ஒரே தீர்வாக இருப்பது அரசு சார்பில் இந்த பாசன வடிகால் வாய்க்காலை முழுவதுமாக தூர்வாரிக்கொடுக்கவேண்டும்.அல்லது தற்போதை நடவு அறுவடைப்பருவம் முடியும் ஜனவரி மாதத்தில் இங்குள்ள விவசாயிகளே இந்த வடிகால் வாய்க்காலை தூர்வாரிட அனுமதிக்கொடுக்கவேண்டும் என இங்குள்ளவர்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.அரசு அதிகாரிகள் இப்பகுதியை ஆய்வு செய்து விரைந்து பாசன வடிகால் வாய்க்காலை தூர்வாரிக்கொடுத்தால் எதிர்காலத்தில் வடிகால் வசதியில்லாமல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகுவது தடுக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
Tuesday, November 5, 2019
சேத்தியாத்தோப்பு அருகே நந்தீஸ்வரமங்கலம் கிராமத்தில் நெல்பயிர் தண்ணீரில் மூழ்கியதால் வடிகால் வசதி செய்து தரகோரிக்கை

-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் எம்ஆர்கே கூட்டுறவு சர்க்கரை ஆலை கடந்த இருபதாண்டுகளுக்கும்மேலாக செயல்பட்டு வருகிறது.சேத்தியாத்தோப்பு,...
-
சேத்தியாத்தோப்பு அருகே வலசக்காடு கிராமத்தில் ஆழ்துளை கிணற்றை மூடிய எஸ்ஐக்கு பொதுமக்கள் பாராட்டு.தமிழகத்தில் மீண்டும் ஒரு துயரமான ஆழ்து...