உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Tuesday, November 5, 2019

சேத்தியாத்தோப்பு பழைய பாலத்தின் உயரம் குறைவான தடுப்புச்சுவற்றினை பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க கோரிக்கை




சேத்தியாத்தோப்பு பழைய பாலத்தின் உயரம் குறைவான தடுப்புச்சுவற்றினை பாதுகாப்பு நடவடிக்கை எடுக்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் 150 ஆண்டுகள் பழைமையான சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு அமைந்துள்ளது.இந்த அணைக்கட்டின்மேல் பொதுமக்கள் பயன்படுத்தவும் மற்றும் போக்குவரத்துக்கும் சென்ற காலங்களில் பயன்பட்டுவந்தது.பழைமையான பாலம் ஆதலால் கடந்த இருபதாண்டுகளுக்குமுன்பு வாகன போக்குவரத்துக்கு தடைசெய்யப்பட்டு பொதுமக்கள்,மற்றும் இருசக்கர வாகன போக்குவரத்துக்கு மட்டும் தற்போது வரை அனுமதிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் பழைமையான இப்பால அணைக்கட்டினை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.அப்போது பாலத்தின் உள்பக்கத்தில் கான்கிரீட் கலவைகொண்டு சாலை சீரமைக்கப்பட்டது.இதனையடுத்து பாலம் புதுப்பிக்கப்பட்டு இன்றுவரை மக்கள் பயன்பாட்டுக்கு இருந்து வருகிறது.இவ்வாறான சமயத்தில் தற்போது இப்பழைய பாலத்தில் கிழக்குபகுதி சுவரானது பராமரிப்புக்குபின் உயரம் குறைந்து சாலைக்கும் பாலத்தின் உயரத்திற்கும் குறைந்தபட்டச உயரமே வெறும் இரண்டு அடி உயரம் அளவிற்குதான் இருக்கிறது.இவ்வாறு இருப்பதனால் பாலத்தில் எதிர்பாராமல் நிறைய விபத்துக்களும்,விபத்துக்களின்போது உயிரிழப்புக்களும் ஏற்பட்டுள்ளது.அதற்கு காரணம் பாலத்தின் சுவர் உயரம் குறைவாக இருப்பதால் விபத்தின்போது அடிபட்டு பாலத்திலிருந்து தூக்கிவீசப்பட்டு ஐம்பதடி ஆழமுள்ள தரைத்தளத்தில் விழுந்து உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.தற்போது இப்பழைய பாலத்தினை நம்பி சுற்றுபுற பகுதிகளைச்சேர்ந்த முப்பதுக்குமேற்பட்ட கிராமமக்கள்,பள்ளி.கல்லூரி மாணவர்கள்,வேலைக்கு செல்வோர்,சிறுவர்,சிறுமிகள் என பலரும் பயன்படுத்தி வருவதால் எப்போதும் உயரம் குறைவான ஆற்றின்சுவர் அச்சத்தை ஏற்படுத்தியே வருகிறது.அதனால் இந்த உயரம்குறைவான சேத்தியாத்தோப்பு பழைபாலத்தின் சுவற்றை பாதுகாப்பு நடவடிக்கை எடுத்து அதன் உயரத்தை அதிகாரிக்க வேண்டும் என இப்பகுதியினர் அரசுக்கும் அதிகாரிகளுக்கும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள்.