சேத்தியாத்தோப்பு பேரூராட்சியில் திமுக எம்எல்ஏ ஆய்வு.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பேரூராட்சியில் திமுகவின் புவனகிரி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ துரை.கி.சரவணன் ஆய்வு செய்தார்.சேத்தியாத்தோப்பு ஆசிரியர் நகரில் நீண்டகாலமாக மழைத்தண்ணீர் தேங்கியிருப்பதை தடுக்கும்விதமாக புவனகிரி எம்எல்ஏ வின் சிறப்பு நிதியில் அமையவுள்ள புதிய கான்கிரீட் சாலை அமைப்பதை பார்வையிட்ட அவர் தற்போது நடைபெறும் பணியை விரைவாகவும் தரமாகவும் அமைத்திடவேண்டும் என அறிவுறுத்தினார்.பின்பு சேத்தியாத்தோப்பு பகுதியின் மாரியம்மன்கோவில் தெருவில் மழைநீர்,சாக்கடைநீர் தேங்கியிருப்பதற்கு வடிகால் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார்.மேலும் டெங்கு பாதிப்பு ஏற்படாதவாறு தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனவும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார்.இந்த ஆய்வின்போது திமுக மாவட்ட துணை அமைப்பாளர் மதியழகன்,மாவட்ட பிரதிநிதி கருணாநிதி,தங்ககுலோத்துங்கன்,நகர இளஞரணி செந்தில்நாதன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் உடனிருந்தனர்.
படம்&3கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பேரூராட்சியில் புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் துரை.கி.சரவணன் பல்வேறு பணிகள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டார்.