புவனகிரியில்
போலீஸ்காரர் ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சுவற்றில் மோதி
விபத்து. கடலூர் மாவட்டம் புவனகிரி காவல் நிலையம் அருகில் பண்ருட்டியில்
இருந்து நாகப்பட்டினம் நோக்கி சென்ற கார் நேற்று முன்தினம் இரவு 2
மணியளவில் புவனகிரி காவல் நிலையம் அருகில் வந்த போது கட்டுப்பாட்டை
இழந்து அருகில் உள்ள ஒரு சுவற்றில் மோதியது. உடனடியாக சம்பவ இடத்திற்கு
விரைந்த புவனகிரி போலீசார் காரில் பலத்த காயம் அடைந்திருந்த நான்கு பேரை
மீட்டு பாண்டிச்சேரி பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து
போலீசார் விசாரணை செய்தபோது பண்ருட்டி கீழ் காங்கேயம்குப்பம் பகுதியைச்
சேர்ந்த உலகநாதன் மகன் சண்முகவடிவேல் நாகப்பட்டினம் மாவட்டத்தில்
போலீஸ்காராக பணி செய்து வருகிறார். இவர் விடுமுறையில் தனது ஊருக்கு
வந்தவர். விடுமுறை முடிந்து தனக்கு சொந்தமான காரில் தனது மனைவி கௌரி, மகன்
அக்ரிதரன் மாமியார் ராஜகுமாரி உள்ளிட்டோருடன் சண்முகவடிவேல் காரினை ஓட்ட
பண்ருட்டியில் இருந்து நாகப்பட்டினம் நோக்கி சென்ற நேரத்தில் அவர்கள் வந்த
கார் எதிர்பாராதவிதமாக புவனகிரி காவல் நிலையம் அருகில் வந்த போது
கட்டுப்பாட்டை இழந்து கார் அருகிலுள்ள சுவற்றில் மோதி விபத்து ஏற்பட்டது
என்பது தெரியவந்தது. விபத்து குறித்து சண்முகவடிவேல் மனைவி கௌரி கொடுத்த
புகாரின்பேரில் புவனகிரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து
வருகிறார்கள்.
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...