கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் புகழ்பெற்ற ஆற்காடு லுத்தரன் திருச்சபை உள்ளது.இதில் இறந்தவர்களை நினைவுகூரும் வகையில் மற்றும் வணங்கும் வகையில் கல்லறை திருவிழா நடைபெற்றது. இதில் போதகர் மறைதிரு ஸ்பர்ஜன் மற்றும் சபை பஞ்சாயத்து செயலர் பிரேம்குமார், பொருளாலர் ராஜ மனோகரன்,பஞ்சாயத்து உறுப்பினர்கள் பெண்ணெட், ராஜ்குமார், பிரேம்,கம்பீர நாதன், ராஜன், மோசஸ், ஜான்சிராணி, ஜார்ஜ் ஸ்டீபன், செல்வகுமார் வாலிப இயக்கத்தின் செயலாளர் சம்பத்குமார், பாடகர் குழு தலைவர் சாமுவேல், பிரகாஷ், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
கல்லறை விழாவில் சபையார் கலந்துகொண்டனர்.கிருஸ்தவர்கள் குடும்பத்தில் இறந்தவர்களை நினைவுகூறும்வகையில் கல்லறையை மலர்களால் அலங்கரித்து மெழுகுவத்தி ஏற்றி வழிபட்டனர்.இவ்வாறு செய்வதால் இறந்த முன்னோர்கள் வழிநடத்தலில் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்பது காலம் காலமாக இருந்து வரும் நம்பிக்கையின்படி இந்த கல்லறை திருவிழா வெகுசிறப்பாக நடைபெற்றது.