உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Monday, October 14, 2019

புவனகிரி அருகே கம்பியூட்டரை ஹேக் செய்த மர்மநபர்கள் ஒரு லட்சம் பணம் கேட்டு மிரட்டல்

புவனகிரி அருகே கம்பியூட்டரை ஹேக்செய்த மர்மநபர்கள்.ஒருலட்சம் பணம்கேட்டுபணம் கேட்டு மிரட்டல்.
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ளது ஊ.ஆதனூர் கிராமம்.இக்கிராமத்தில்மெயின்ரோட்டில் வசித்து வருபவர்  ரங்கநாதன் மகன் சர்க்கரைவர்த்தி.இவர்தனது வீட்டிலேயே கம்பியூட்டரை வைத்து போட்டோ&ஸ்டுடியோ வேலைகளை செய்து
வருகிறார்.கடந்த இரண்டு ஆண்டுகளாக போட்டோ ஸ்டுடியோ வேலைகளை செய்து வரும்சர்க்கரை ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்.கிராமம்,நகரம் எனபலஇடங்களுக்கும் சென்று திருமண விழாக்கள்,மஞ்சள்நீராட்டு மற்றும் கோவில்திருவிழாக்கள் என போட்டோ,வீடியோ எடுத்து அதனை சம்மந்தப்பட்டவர்களுக்கு
அழகாக பதிவு செய்து தருவார்.இந்நிலையில் கடந்த இரண்டுநாட்களுக்கு முன்புஇவர் தனது வீட்டில் கம்பியூட்டரை ஆன்செய்து போட்டோ வேலை
செய்துகொண்டிருந்தார்.அப்போது இவரது கம்பியூட்டர் திரையில் ஒரு
ஸ்கிப்பிங் மெசேஜ் தோன்றவே அதனை ஸ்கிப்பிங் செய்துள்ளார்.இதனையடுத்து
பத்து நிமிடங்களுக்கு பிறகு  அவருடைய கம்பியூட்டர் தானாகவே ஆப்
ஆனது.பிறகு அதுவே சில நொடிகளில் ஆன் ஆகியது.இப்போது சர்க்கரைவர்த்தி தன்னுடைய கம்பியூட்டரில் இருக்கும் போட்டோ,வீடியோ பைல்களை திறக்க முற்பட்டபோது முடியாமல் போனது.    மேலும் கம்பியூட்டர் மொத்தமும்
முடங்கிப்போனது. கம்பியூட்டரை ஆன் செய்ய முடிகிறது.மற்றும் அதனுள்
பைல்கள் இருக்கும் போல்டரை பார்க்க முடிகிறது.ஆனால் எந்த பைலையும்
திறக்கமுடியவில்லை.அப்போது அவருடைய கம்பியூட்டரில் உள்ள அனைத்துபோல்டர்களிலும் ஒரு நோட்பேட் தகவல் பதிவாகியிருந்தது.சர்க்கரைவர்த்
தியோடகம்பியூட்டர் ஹேக் செய்யப்பட்டு அதிலுள்ள அனைத்து பைல்களும்
எடுக்கப்பட்டுள்ளது என்றும் அந்த பைல்கள் மீண்டும் வேண்டும் என்றால் 980
அமெரிக்க டாலர் ஆன்லைனில் கட்டவேண்டும்.அதிலும் 72 மணிநேரத்திற்குள் பணம் கடடினால் 50சதம் சலுகையில் 480 டாலர் கட்டினால் போதும் என்று தகல் கூறியது.இது இந்திய பணமதிப்பில்   சுமார் என்பதாயிரம் வருவதாகசர்க்கரைவர்த்தி குறிப்பிட்டார்.இதன்பிறகு இதற்கு என்ன செய்வது என்றுதெரியாமல் தற்போது வேதனையுடன் உள்ளார் சர்க்கரைவர்த்தி.கடந்த இரண்டுஆண்டுகளாக கம்பியூட்டரில் சேமித்து வைக்கப்பட்டிருந்த
திருமணம்,மஞ்சள்நீராட்டு,கோவில் விசேஷங்கள் என பல்வேறு தகவல்கள்
திருடப்பட்டுள்ளது. தன்னுடைய கம்பியூட்டரில் உள்ள தகவல்கள்
திருடப்பட்டுவிட்டது என தன்னுடைய வாடிக்கையாளர்களிடம் எப்படி தெரிவிப்பதுஎன்று பதில் தெரியமால் சோகத்துடன் உள்ளார் சர்க்கரைவர்த்தி.இதுகுறித்து
தன்னைபோல் ஸ்டுடியோ வேலை பார்க்கும் பலரிடமும் தனக்கு இதுபோல்
நேர்ந்துள்ளது என்றும் கம்பியூட்டரில் போட்டோ ஸ்டுடியோ வேலை செய்யும்போதுகவனமாக இருக்கவேண்டும் எனவும் எச்சரித்து வருகிறார்.ஹேக்கிங் செய்வது
உலகளவில் நடந்து வந்தாலும், மிகப்பெரிய விஷயங்களுக்கு பயன்படுத்தப்பட்டஹேக்கிங் இன்றைய நிலையில் மிக சாதாரணமாக போட்டோ ஸ்டுடியோ
வைத்திருப்பவர்களை நோக்கி திரும்பியுள்ளது பலரையும்
அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.அதிலும் குக்கிராமத்திலும் நுழைந்து
ஹேக்கர்கள் கைவரிசை காட்டியிருப்பது அதிர வைத்துள்ளது.
தமிழகத்தில் இதுபோன்று போட்டோ ஸ்டுடியோ நடத்துபவர்களை வைத்து ஹேக்கிங்செய்துள்ள சம்பவம் ஏற்கெனவே விழுப்புரம் மாவட்டம் திண்டிவணம்அயன்தோப்பில் போட்டோ ஸ்டுடியோ நடத்திவரும் கண்ணன் என்பவரிடமும், நெல்லை
மாவட்டம் நாங்குநேரியில் உள்ள ஸ்டுடியோ நடத்தி வரும் ஜெயகணேசன்
என்பவரிடமும் நடந்துள்ளது.இதுகுறித்த செய்திகள் ஏற்கெனவே
வெளிவந்துள்ளன.தற்போது கடலூர் மாவட்டம் ஊ.ஆதனூர்கிராமத்தில் உள்ள
சர்க்கரைவர்த்தி என்பவரிடமும் நடைபெற்று தமிழகத்தின் மூன்றாவது சம்பவமாகஇந்த ஹேக்கிங் சம்பவம் மாறியுள்ளது.இதற்கு போலீசார் தக்க நடவடிக்கைஎடுக்கவேண்டும் என அனைவருமே அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.