உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Monday, October 14, 2019

புவனகிரி அருகே ஐம்பதாண்டுகளுக்கு பிறகு ஸ்ரீரேணுகா பரமேஸ்வரி,மாரியம்மன் ஆலயத்தில் லட்சார்த்தனை விழா




,

புவனகிரி அருகே ஐம்தாண்டுகளுக்கு பிறகு ஸ்ரீரேணுகா பரமேஸ்வரி ,மாரியம்மன் ஆலயத்தில் லட்சார்த்தனை விழா.கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே அமைந்துள்ளது கிருஷ்ணாபுரம் கிராமம்.இக்கிராமத்தில் இருநூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட ஸ்ரீரேணுகாபரமேஸ்வரி ஆலயம் அமைந்துள்ளது.இந்த ஆலயம் மிகவும் பழமையான,சக்திவாய்ந்ததுமான ஆலயமும் ஆகும்.இந்த ஆலயத்தில் உள்பகுதியில் மாரியம்மன்,மற்றும் நவக்கிரகங்களும் அமையபெற்றுள்ளன.இவ்வாறு சிறப்பு மிக்க இந்த ரேணுகா பரமேஸ்வரி -ஆலயத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு அதாவது ஐம்பதாண்டுகளுக்கு பிறகு கிராமமக்கள் அனைவரும் பங்கேற்ற முதல் லட்சார்த்தனை விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.இதயொட்டி காலை முதலே ரேணுகாதேவி,மாரியம்மன்,நவக்கிரக தெய்வங்களுக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று, பின்பு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர்.பின் மாலை பல்வேறு மலர்களால் லட்சார்த்தனை துவங்கி இரண்டுமணிநேரத்திற்குமேலாக ரேணுகா பரமேஸ்வரி,மாரியம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு பல்வேறு மலர்கள்,வாசனை வஸ்துக்கள் மூலம் மகாலட்சார்த்தனை நடைபெற்றது. லட்சார்த்தனை முடிவில் ஸ்ரீரேணுகா பரமேஸ்வரி,மற்றும் மாரியம்மனுக்கு மகாதீபாரதனை காட்டப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.இது குறித்து கோவில் தரப்பில் தெரிவிக்கப்படுவதாவது உலக நன்மை,மக்கள் பசி,பஞ்சம் அற்று,எங்கும் வளமை நிறையவும்,இல்லங்களில் அமைதி தவழவும் இந்த லட்சார்த்தனை நடைபெற்றது.இதில் பங்கேற்ற அனைவருக்கும் ஸ்ரீரேணுகா பரமேஸ்வரி,மாரியம்மன் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் வற்றாத செல்வத்தை வாரிவழங்கிடுவார்கள் என்று தெரிவித்தனர். விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கிருஷ்ணாபுரம் கிராமமக்கள் செய்திருந்தனர்