உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Monday, October 14, 2019

முநூலில் பாரத பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரைப்பற்றி அவதூறு பதிவிட்டவர்மேல் நடவடிக்கை எடுக்ககோரி புகார்




கடலூர் மாவட்டம் புவனகிரி காவல் நிலையத்தில் முகநூலில் பாரதபிரதமர்
மோடி,தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,மற்றும் தமிழக
அமைச்சர்,தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டவர்களைப்பற்றி
தொடர்ந்து அவதூறாக பேஸ்புக்கில் பதிவிட்டுவரும் கன்னியாகுமரி மாவட்டம்
கண்ணூர் பகுதியைச்சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் ஜேபின்சார்லஸ் என்பரை கைது
செய்து நடவடிக்கை எடுக்ககோரி கடலூர் மாவட்ட பாஜக இளைஞரணித்தலைவர் தியாகு
தலைமையில் புகாரளிக்கப்பட்டது.இந்நிகழ்ச்
சியின்போது  மாவட்ட செயலாளர்
புவனை வெற்றிவேல்,நகர தலைவர் நாகராஜன்,மாவட்ட செயற்குழு இளங்கோ,வர்த்தக
பிரிவு ரவிச்சந்திரன்,ஓபிசி அணிபொருளாளர் ராஜாராமன்,துணை தலைவர்
வேதகிரி,மீனவ பிரிவு மாவட்ட துணைதலைவர் கந்தன்,நகர இளைஞரணி
பொதுச்செயலாளர் உள்ளிட்டவர்கள் இணைந்து புகார் மனுவினை
அளித்தனர்.இதுகுறித்து பாஜக நிர்வாகிகள் தெரிவிக்கும்போது தமிழகத்திற்கு
வருகை தந்த சீன அதிபர் ஜி ஜிம்மிங்&பாரதபிரதமர் மோடி ஆகியோர் சந்திப்பதை
பற்றி மிகவும் கொச்சையாகவும், அவதூறாகவும் பேஸ்புக்கில் ஜேபின் சார்லர்
பதிவிட்டிருந்தார்.இதனை பார்த்த அனைத்து பாஜகநிர்வாகிகள் உள்ளிட்டவர்கள்
மனம் வேதனையடையச்செய்தது.இதனையடுத்து கடலூர் பாஜக மாவட்ட தலைவர் தாமரை
மணிக்கண்டன் உத்தரவின்பேரில் இப்போது புகார் அளிக்கப்பட்டுள்ளது.மேலும்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,துணை முதல்வர் ஓபி
பன்னீர்செல்வம்,அமைச்சர்கள் உள்ளிட்ட பலரினைப்பற்றியும்
காங்கிரஸ்பிரமுகரான ஜேபின் சார்லர்ஸ் தொடர்ந்து பேஸ்புக்கில் அவதூறாக
பதிவிட்டுள்ளார்.இதனையடுத்து அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்ககோரி
தமிழக முழுவதும் தொடர்ந்து புகாரளிக்கப்பட்டு வருகிறது என்றும் அவர்கள்
தெரிவித்தனர்.இந்நிலையில் தன்னுடைய அவதூறு பதிவை ஜேபின் சார்லஸ் டெலிட்
செய்துள்ளார்.ஆனாலும் ஜேபின் சார்லஸ் பதிலிட்ட அவதூறு பதிவினை
அனைத்தையும் சேகரித்து வைத்துள்ளதாக புகாரளித்த பாஜகவினர்
தெரிவித்துள்ளனர்.