உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Tuesday, October 15, 2019

சேத்தியாத்தோப்பு அருகே அப்துல்கலாம் பிறந்தநாள் கொண்டாடிய புடையூர் கிராமமக்கள்







கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே அமைந்துள்ளது புடையூர் கிராமம்.இக்கிராமத்தில் அரசுக்கு சொந்தமான இரண்டுக்குமேற்பட்ட ஏக்கர் நிலம் இருந்து வந்தது.முள் காடாக விளங்கிய அதனை கிராமமக்கள் ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் தாங்களாகவே சுத்தம் செய்து முட்கள் மற்றும் புதர்செடிகளை அகற்றினார்கள்.இந்நிலையில்  அந்த இடத்திற்கு மறைந்த முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களின் பெயரினை வைத்து அப்துல்கலாம் நினைவு பூங்கா என்று பெயர்சூட்டினார்கள்.இதன் பின்பு அப்பூங்காவில் தென்னை,மா,பலா,கொய்யா,ஆர்எஸ்பதி, உள்ளிட்ட பல்வேறு பயன்தரும் மரகன்றுகளையும்,பூச்செடிகளையும் வைத்து பராமரித்து வந்தனர்.அவ்வாறு பராமரிக்கப்பட்ட அப்துல்கலாம் நினைவு பூங்காவானது இன்று பச்சை பசேலாக மரங்கள்,பூச்செடிகள் என வளர்ந்து  பசுமையாகவும்,கண்களுக்கு குளிர்ச்சியாகவும்  காட்சியளிக்கிறது.புடையூர் ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் இந்த அப்துல்கலாம் நினைவு பூங்கா பராமரிக்கப்பட்டு வருகிறது.இதற்கான அனைத்து செலவினங்களையும் கிராமமக்கள் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளின் துணையோடு செயல்படுத்தி வருகிறார்கள்.இவ்வாறான சூழலில் இக்கிராமத்தில் அப்துல்கலாமின் 88வதுபிறந்த நாள் விழா அவரின் பெயர்தாங்கிய பூங்காவில் சிறப்பாக கிராமமக்களால் கொண்டாடப்பட்டது.இதனை முன்னிட்டு கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அதிகாரி வட்டார கிராம ஊராட்சி சுப்பிரமணியன் தலைமையில் கொண்டாடப்பட்டது.துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தனபால்,குணசேகரன்,பொறியாளர் ரத்தினகுமார்,ஒன்றிய மேற்பார்வையாளர் சுரேஷ், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பொதுமக்களுக்கு கற்கண்டுகள்,சாக்லேட் ஆகியவை வழங்கப்பட்டது.பின் பூங்காவில் பலவகையான மரக்கன்றுகள் நடப்பட்டது.இதுகுறித்து புடையூர் கிராமமக்கள் தெரிவிக்கும்போது அரசு அதிகாரிகளின் உதவியோடு இக்கிராமத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது.அதில் இப்பூங்காவும் ஒன்று.சுற்றுப்புறத்தூய்மையை காக்கும்பொறுட்டு,இயற்கையை பா-துகாக்கவும் மரங்கள் அதிகம் நட்டு வருகிறோம்.எங்களது நோக்கமெல்லாம் புடையூர் கிராமத்தை பசுமைக்கிராமமாக மாற்றுவதே என புடையூர் கிராமமக்கள் மக்கள் மகிழ்ச்சியோடு தெரிவித்தனர்.இந்த விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் புடையூர் ஊராட்சி செயலர் ஐயப்பன் ஒருங்கிணைத்திருந்தார்.