உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Tuesday, October 15, 2019

சேத்தியாத்தோப்பு அருகே பின்னலூர் பகுதியில் நடவு வயல்களை வேளாண்மை உதவி ,இயக்குநர் ஆய்வு செய்தார்






சேத்தியாத்தோப்பு அருகே பின்னலூர் பகுதியில் நடவு வயல்களை வேளாண்மை உதவி இயக்குநர் ஆய்வு செய்தார்.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே பின்னலூர் கிராமம் உள்ளது.இக்கிராமத்தில்  எந்திர நடவில் நூற்றுக்கு மேற்பட்ட ஏக்கரும், நேரடி நெல்விதைப்பில் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஏக்கரும் விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர்.அவ்வாறு  பயிரிடப்பட்டுள்ள நெல் பயிர்கள் தற்போது செழிப்பாக வளர்ந்து வருகின்றன.இந்நிலையில் அரசு மானியத்துடன் பயிரிடப்பட்டுள்ள எந்திர நடவு மற்றும் நேரடி நெல்விதைப்பை புவனகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சுதாமதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது நடவு வயல்களில் பயிர்கள் நேர்த்தியாக வளர்ந்திருப்பதை பார்த்து தக்க சமயத்தில் பயிர்களுக்கு வேளாண்மைத்துறை மூலம் அறிவுறுத்தப்பட் மருந்துகளை இடவேண்டும்.சரியானபடி களையெடுத்து பராமரித்து நீர்பாய்ச்சவேண்டும்.நெல்லில் பராமரிப்பு பணிகளை போதுமான அளவில் மேற்கொள்ளும்போதுதான் அதிகளவில் மகசூல், நல்லவருமானமும் எடுக்கமுடியும் என்றும் அவர் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் உதவி வேளாண்மை அலுவலர் செந்தில், அட்மாதிட்ட அ-லுவலர்,பயிர் அறுவடை பயிற்சியாளர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.