உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Monday, October 14, 2019

ஜியோவின் வலையில் சிக்க வேண்டாம் ஜியோவை விட்டு வெளியேறுவதே நல்லது



தற்போது அனைவரின் பேச்சாக இருப்பது ஜியோ நிறுவனம் அறிவித்துள்ள நிமிடத்திற்கு 6 பைசா கட்டணம் பற்றிதான்.உண்மையில் ஆரம்ப காலத்திலேயே ஜியோ இதனை முடிவு செய்துதான் தனது அனைத்து இலவசங்களையும் நடைமுறைப்படுத்தி வந்தது.தற்போது தனக்கு பெருமளவில் இழப்பு ஏற்படுவதாக சொல்லும் ஜியோ ஆரம்பத்தில் இரண்டு ஆண்டுக்கும் மேலாக முற்றிலும் இலவசத்தை வழங்கியபோது எப்படி சமாளித்தது? அதை கொஞ்சம் யோசித்தால் உண்மை புரியும்.ஜியோவின் மாஸ்டர் பிளானே அனைவரையும் தனது நெட்வொர்க்கிற்கில் கொண்டு வந்து லாக்செய்வதுதான்.தற்போது அதை செயல்படுத்த துவங்கியிருக்கிறது.இனி அதன் வேலையை காட்டாமல் விடப்போவது இல்லை.மற்ற நிறுவனங்கள் மக்களின் நிலையை நன்கு அறிந்து செயல்பட்டு வந்தன.ஜியோவின் வருகையால் மக்களுக்கு எளிதான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றன.தற்போதும் தொடர்ந்து கொடுத்து வருகின்றன.இன்று ஜியோ அறிவித்திருக்கும் அறிவிப்பானது அதற்கு மிக பெரிய இழப்பாகவே இருக்கும் என பலரும் அடித்து கூறிவருகிறார்கள்.இனி ஜியோவை கால்களுக்கு பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறையும்.இப்போதே அது ஆரம்பித்து விட்டது.இண்டர்நெட்டுக்கு மட்டும்தான் இனி ஜியோவை பயன்படுத்துவார்கள்.இதையும் பலர் அடித்து சொல்கிறார்கள்.இதைவிட ஜியோவிலிருந்து பலரும் தங்களுக்கு பிடித்த மற்ற நெட்வொர்க்குக்கு மாறிவருகிறார்கள்.இதனால் இனி மெல்ல மெல்ல ஜியோவின் வாடிக்கையாளர்கள் சரிய ஆரம்பிப்பார்கள்.அ-து பலமான அடியாக கூட மாறும் என்று வல்லுநர்கள் கூற்றாக உள்ளது.ஜியோவின் அறிவிப்பால் மற்ற நிறுவனங்களுக்கு இயல்பான வருவாய் கூடும்.அதன் சந்தாதாரர்களும் அதிகரிப்பார்கள்.ஒருவேளை ஜியோவைப்போல் மற்ற நிறுவனங்களும் இப்படி ஒரு அறிவிப்பை விட்டால் எண்ணாகும் என்று நீங்கள் கேட்கலாம்.மற்ற நிறுவனங்களுக்கு தமிழக மக்களின் மனநிலையும்,சந்தை நிலவரமும் தெளிவாக தெரியும்.அதனால் மற்ற நிறுவனங்கள் இப்படி சொல்ல வாய்ப்பே இல்லை.இனி ஜியோ எந்த ஒரு பொருளை சந்தைப்படுத்தினாலும் அதற்கு கண்டிப்பாக இறங்கும்முகம்தான் இருக்கும் என்பது பலரின் கருத்து.ஏனெனில் முதலில் இலவசம்,பிறகு பணம் என்பது ஜியோவின் கொள்கையாக உள்ளது.அதனால் ஒரு தடவை ஏமாற்றமடையும் தமிழக மக்கள் மறுமுறை ஏமாற மாட்டார்கள்.அதனால் ஜியோ பழைய நடைமுறையை தொடருவது அதற்கு சிறப்பானதாக இருக்கும் என்று ஒரு சாமானி மனிதர் கூறுவதை நம்மால் பார்க்க முடிந்தது.