உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Saturday, October 19, 2019

சேத்தியாத்தோப்பு அருகே வெய்யலூர் கிராமத்தில் இயற்கை முறையில் கத்திரிக்காய் விளைவித்து அதிக லாபம் ஈட்டும் விவசாயி




கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே அமைந்துள்ளது வெய்யலூர் கிராமம்.முற்றிலும் விவசாயத்தை சார்ந்துள்ள வீராணம் ஏரிப்பாசன கிராமம் ஆகும்.இக்கிராமத்தில் நெல்,பன்னீர் கரும்பு முக்கிய விவசாய விளைபொருட்களாக இருக்கிறது. இந்நிலையில் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் நெல்,கரும்பில்போதுமான வருமானம் இல்லாத நிலையில் சிலர் மாற்றுப்பயிர்களை நாட ஆரம்பித்துள்ளனர்.அதன்படி இதே கிராமத்தில் உள்ள ராஜேந்திரன் என்ற இயற்கை விவசாயி தற்போது தனக்கு சொந்தமான வயலில்  கத்திரிக்காய் பயிர் சாகுபடி செய்துள்ளார்.இயற்கை முறையில் பயிர் செய்யப்பட்டுள்ள இந்த கத்திரிக்காய் சாகுபடியில் நல்ல விளைச்சல் ஏற்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசின் வேளாண்மைத்துறை அதிகாரிகள் அவருக்கு வழிகாட்டியதால் இன்று கத்திரிக்காய் சாகுபடியை செய்துள்ளதாக ராஜேந்திரன் குறிப்பிடுகிறார்.

இயற்கை முறையில் விளைவிக்கப்படுகின்ற கத்திரி என்றவுடன் கிராமத்திலேயே பலரும் விரும்பி வந்து வாங்கிச்செல்கிறார்கள்.மேலும் வழக்கமாக காய்கறிகடைகளுக்கும் சென்று கொடுப்பதால் உடனடியாக பணமும் கிடைக்கிறது என்கிறார் கத்திரிக்காய் சாகுபடி செய்துள்ள விவசாயி ராஜேந்திரன்.ஆரம்பத்தில் நெல்,கரும்பு பயிர் செய்து வந்த இவர் அவற்றில் உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லாமல் போனதால் குடும்பத்தின் பொருளாதார நிலை மிக சிரமத்திற்கு ஆளானது. பின்பு மாற்றுப்பயிர் செய்ய முயற்சிக்கலாமே என்று யோசித்து தமிழ்நாடு அரசின் வேளாண்மைத்துறை அதிகாரிகளை நேரில் சென்று பார்வையிட்டு தன்னுடைய நிலையை கூறியிருக்கிறார்.அப்போது அரசு வேளாண்மைத்துறை அதிகாரிகள் எளிதில் விற்பனையாக கூடிய சாமந்திப்பூவை சாகுபடி செய்ய பரிந்துரைத்தனர்.அவர்களின் கூற்றுப்படியே சாமந்திப்பூவை மாட்டுச்சாணம் மட்டும் பயன்படுத்தி சாகுபடி செய்தார்.



அதில் இயற்கை உரங்கள் போட்டு வளர்க்கப்பட்டதால் சாமந்திப்பூக்கள் நன்றாகவும்,பெரியதாகவும் வளர்ந்தன.ஓரளவுக்கு லாபமும் கிடைத்தது.இருந்தாலும் இதுபோல் காய்கறிகளை பயிர்செய்யலாமே என்று இவர் கத்திரி செடிகளை சாகுபடி செய்ய தீர்மானித்து அதற்கான கன்றுகளை ஓசூரிலிருந்து வரவழைத்து பயிரிட்டார்.அதற்கு வீட்டில் வளர்க்கப்படும் மாடுகளிலிருந்து கிடைக்கும் இயற்கையான சாணத்தை மட்டும் பயன்படுத்தினார். கத்திரி செடிகள் நன்றாக வளர்ந்து செழித்து காய்க்கவும் ஆரம்பித்தது.இதனையடுத்து தனது வயலில் இருந்து பறிக்கும் கத்திரிக்காய்களை இவரும்,இவரது மனைவியும் பறித்து அ-ருகிலுள்ள வியாபாரிகளிடம் சென்று கொடுக்கிறார்கள்.




ஒரு வாரத்திற்கு இருமுறை கத்திரி செடியிலிருந்து காய்பறிக்கும் இவர் சராசரியாக அனைத்து செலவுகளும்போக வாரத்திற்கு ஐந்தாயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தார் ராஜேந்திரன். தோராயமாக ஆண்டுக்கு இரண்டரை லட்சரூபாய் வருமானம் கிடைக்கிறது என்றும் கூறுகிறார்.காய்கறிகளில் கத்திரிக்காய்க்கு எபபோதும் அதிக தேவை இருக்கிறது.எல்லாத்தரப்பு மக்காளாலும் வாங்கக்கூடிய காயாகவு-ம் இருப்பதால் உடனடியாக விற்பனையாகிறது என்கிறார் ராஜேந்திரன்.இது குறித்து ராஜேந்திரனின் மனைவி கூறும்போது பெண்களுக்கு வரம் தரக்கூடிய விஷயம் இது.நான் எனது கணவருக்கு உதவியாக  கத்திரி செடிகளை பராமரித்து வருகிறேன்.

இதனால் எங்களுடைய குடும்ப செலவினங்களுக்கு பெரிதும் உதவுகிறது.வெளியில் வாங்கியிருக்கிற கடன்களை எளிதாகவும் அடைக்க முடிகிறது.என்னைப்போல் பெண்கள் இதுபோன்று காய்கறிகளை தங்களது சின்ன இடத்தில் கூட பயிர்செய்ய ஆரம்பித்தால் கவலைகள் இல்லாமல் வாழமுடியும்.இதிலிருந்து கிடைக்கும வருமானத்தில் நாங்கள் எங்களது குடும்பத்தையும், பார்த்துக்கொண்டு, இதனோடு எங்களது இரண்டு பெண்பிள்ளைகளையும் படிக்கவைத்து வருகிறோம் என்றார் ஆனந்தமாக.மேலும் எதையும் முயற்சிக்கமால் இருப்பதைவிட கொஞ்சம் முயன்றால் நிறைய சாதிக்கலாம்,நிறைய வருமானமும் பார்க்கலாம் என்று தன்னம்பிக்கையையும் தருகிறார் ராஜேந்திரனின் மனைவி ஜெயசித்ரா.