உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Thursday, October 17, 2019

புவனகிரி அருகே ஐந்து வயதிலிருந்து புல்லாங்குழலால் பாடி அசத்தும் பெரியவர் பலரும் பாராட்டு



கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே அமைந்துள்ளது பொன்னங்கோவில் கிராமம்.முற்றிலும் விவசாயம் சார்ந்த கிராமமாக இருந்து வரும் பகுதி. இக் கிராமத்தில் தன்னுடைய  கேள்வி ஞானத்தினால் மட்டும் புல்லாங்குழல் வாசித்து வரும் சிவக்கொழுந்து பற்றி அக்கம்பக்கதிலுள்ள அனைவரும் அறியாதவர்களே கிடையாது.சிறுவயதில் படிப்பைவிட சிவக்கொழுந்துவுக்கு புல்லாங்குழல் வாசிப்பது பிடித்திருந்தது.தன்னுடைய முழுத்திறமையையும் புல்லாங்குழல் வாசிப்பதிலியே செலவிட்டார்.பெற்றோர்கள் பள்ளிக்கு கொண்டுபோய்விட்டால் கையில் புல்லாங்குழலோடு பள்ளிக்கு சென்றான் சிறுவயது சிவக்கொழுந்து.ஆனால் படிப்பை விட புல்லாங்குழல் வாசிப்பது நன்றாக வந்தது.பிறகு குடும்பத்தின் ஏழ்மையான நிலையில் படிப்பினைவிட்டு கூலிவேலைக்கு செல்லவேண்டிய நிலை.பின்பு அதுவே வாழ்க்கையாகவும் மாறிப்போனது.எத்தனை ஏற்றத்தாழ்வுகளை சந்தித்ததாலும் கூலிவேலைக்கு செல்லும்போதும்,வேலை முடிந்து ஓய்வு நேரத்திலும் தன்னுடைய சுமையை குறைப்பதற்கும்,மற்றவர்களின் மனக்கஷ்டங்களை மறக்கடிப்பதற்கும் சிவக்கொழுந்து புல்லாங்குழல் வாசிப்பார்.அவரைச்சுற்றி எப்போதும் அவருடன் கூலிவேலைக்கு செல்பவர்கள் உடனிருப்பார்கள்.இப்படியாக சென்ற நிலையில் திருமணத்திற்கு பிறகும் சிவக்கொழுந்து புல்லாங்குழலால் வாசிப்பது தொடர்ந்து வந்த நிலையில் இதுவே இவருக்கு சோறுபோடும் கடவுளாகவும் மாறியது.ஆம் சிவக்கொழுந்து நன்றாக புல்லாங்குழல் வாசிப்பதை கண்டவர்கள் இவருக்கு சின்ன வாய்ப்புகளை கொடுத்தனர்.ஆம் கிராமங்களில் நடக்கும் அனைத்து நல்லது,கெட்டது போன்ற நிகழ்வுகளிலும் இவருக்கு புல்லாங்குழலால் பாடும் வாய்ப்பு வழங்கப்பட்டது.அப்போது கையில் அஞ்சோ பத்தோ கூலியாக தருவார்கள்.அதை அப்படியே குடுமபத்திற்கு கொடுத்தார் சிவக்கொழுந்து.இப்படியே கடந்த ஐம்பத்தியந்து வருடங்களாக தனது புல்லாங்குழலால் பொன்னங்ககோவில் கிராமத்தின் சுற்றுப்புற பகுதி மக்களின் நினைவிற்கு தெரிந்தவரானார் சிவக்கொழுந்து.தொடர்ந்த கூலிவேலை.தொலையாத வறுமை.ஆனாலும் இன்னமும் மனதில் புல்லாங்குழல் என்றால் புது உற்சாகமும்,ஆர்வமும் பீரிட்டுவருகிறது.இப்படிப்பட்ட நிலையில் இவர் தீவிர எம்ஜிஆர் ரசிகராக இருந்ததானால் சுற்றுப்புறத்தில் எங்கு அதிமுக பொதுக்கூட்டங்கள் நடைபெற்றாலும் இவரை அழைத்து எம்ஜிஆர் பாடல்களை புல்லாங்குழலில் பாடவைப்பார்கள்.மனதிற்கு மகிழ்ச்சியான வெகுமதியும் கொடுத்து அனுப்புவதாக சிவக்கொழுந்து மகிழ்ச்சியோடு கூறுகிறார்.வெளி உலகம் தெரியாத தனக்கு தொடர்ந்து சின்ன சின்ன வாய்ப்புக்களை வழங்கி வரும் அனைவருக்கும் ஆனந்தகண்ணீரோடு தனது கோடானு கோடி நன்றியை தெரிவிக்கிறார் சிவக்கொழுந்து.மேலும்தனது மகனுடன் பொன்னங்கோவில் கிராமத்தின் மெயின்ரோட்டில் வசித்து வரும் சிவக்கொழுந்துவுக்கு தனது இறுதி மூச்சு வரை புல்லாங்குழலால் பாடிக்கொண்டே
இருக்கவேண்டும் என்பதுதான்.