உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Thursday, October 17, 2019

விருத்தாசலம்&பரங்கிப்பேட்டை சாலைப்பணி விரைந்து முடிக்கப்படும் புவனகிரியில் ககன்தீப்சிங்பேடி பேட்டி



   



விருத்தாசலம்&பரங்கிப்பேட்டை சாலைப்பணி விரைந்து முடிக்கப்படும்.புவனகிரியில் ககன்தீப்சிங்பேடி பேட்டி.கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள ஆதிவராகநல்லூர் கிராமத்தில் கடலூர் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ககன்தீப்சிங் ஆய்வு செய்தார்.அப்போது இக்கிராமத்தில் வழியாக செல்லும்  வெள்ளாற்றில் தமிழக அரசின் சிறப்பு நிதித்திட்டத்தில் 95  கோடி மதிப்பில் பரங்கிப்பேட்டை கடல்நீர் உட்புகுவதை தடுக்கும் கதவனையுடன் கூடிய தடுப்பணை கட்டப்படவுள்ளது.இதனை ஆய்வு செய்த ககன்தீப்சிங்பேடி இப்பகுதி விவசாயிகள்,பொதுமக்கள்,மற்றும் சமூக ஆர்வலர்களின் நீண்டநாள் தொடர்கோரிக்கையால் இந்த தடுப்பனை புவனகிரி வெள்ளாற்றில் ஆதிவராகநல்லூர் கிராமத்தில் கட்டப்படவுள்ளது என்று தெரிவித்த அவர், இதனால் இப்பகுதியில் உள்ள முப்பதுக்கும்மேற்பட்ட கிராமமக்கள் விவசாயிகள் பயனடைவார்கள்.நிலத்தடி நீர்மட்டம் பாதுகாக்கப்படும்.கடல் நீர் உட்புகுவது முற்றிலும் தடுக்கப்படும்என்றும் அவர் தெரிவித்தார்.அதிகாரிகளுடன் ஆற்றில் தடுப்பணை அமைய உள்ள இடத்தை வரைபடத்தின்மூலம் அதிகாரிகள் கூற கேட்டறிந்தார்.ககன்தீப்சிங்பேடி,கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன்,மாவட்ட வருவாய் அலுவலர்,ஆர்டிஓ விசுமகாஜன், புவனகிரி வட்டாட்சியர் சத்யன் உள்ளிட்ட அதிகாரிகளும் இந்நிகழ்ச்சியின்போது உடனிருந்தனர்.இதனை பார்வையிட்டபின் புவனகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ககன்தீப்சிங்பேடி மழை வெள்ள பேரிடர்காலத்தில் புவனகிரி தாலுக்காவில் உள்ள கிராமங்களில் முதல் தகவல் அளிக்கும் பணியாளர்கள் நூற்றுக்குமேற்பட்டவர்களுக்கு  தனி அடையாள கவச உடையை கொடுத்தார்.இதுகுறித்து அவர் பேசும்போது இந்த ஆடையானது பொதுமக்களிடத்தில் நாம் தனித்து அடையாளம் காட்டப்பட்டு அவர்களது சேவைக்காக நாம் வந்திருக்கிறோம் என்று நம்மை அடையாளப்படுத்தும்.அதனால் நாம் அவர்களுக்கு எளிதில் சேவைகளை செய்யமுடியும் என்று கூறினார்.பிறகு செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ககன்தீப்சிங்பேடி கூறும்போது தற்போது விருத்தாசலம் பரங்கிப்பேட்டை சாலைப்பணியானது பாதியில் நின்றுவிட்டது என்று பலரும் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.நான் மாவட்ட ஆட்சியருடன் பரங்கிப்பேட்டை &விருத்தாசலம் சாலையில் மஞ்சக்கொல்லை&மிராளூர் பகுதியில் ஆய்வு செய்தோம்.இந்த சாலைக்கான பழைய ஒப்பந்ததாரர் நீக்கப்பட்டு தற்போது புதிய ஒப்பந்ததாரர் மூலம் சாலைப்பணிகளை விரைந்து முடிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கவுள்ளோம்.அதனால் இன்னும் ஓரிரு மாதங்களில் இந்த சாலைப்பணி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்று தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியின்போது அனைத்துறை அதிகாரிகள் ,விவசாய சங்கத்தினர் என பலரும் உடனிருந்தனர்.