உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Wednesday, October 16, 2019

தமிழ்நாடு அரசின் நஞ்சில்லா வீட்டுத்தோட்டம் அமைப்போம் திட்டத்தில் இலவச காய்கறி விதைகள் வழங்கல்








மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்£மி அவர்கள் தமிழக மக்கள் தங்களது இல்லங்களில் நஞ்சில்லா வீட்டுத்தோட்டம் அமைப்பதற்கு தமிழக அரசின் சார்பில் இலவசமாக காய்கறி விதைள் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.
இதன் நோக்கமானது மக்கள் தங்கள் இல்லங்களில் உள்ள இடங்களில் இயற்கை தோட்டம் அமைத்து அதில் பல்வேறு காய்கறிகளை இயற்கை முறையில் பயிரிட்டு நஞ்சில்லாமல் பயன்படுத்தவேண்டும் என்பதுதான்.அதன்படி தமிழகத்தின் பல இடங்களிலும் தமிழ்நாடு  அரசு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் அரசின் இலவச காய்கறி விதைகள் வழங்கப்பட்டு வருகிறது.கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே வெய்யலூர் கிராமம் அமைந்துள்ளது.இக்கிராமத்தில் கீரப்பாளையம் வட்டார தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை உதவி இயக்குநர் கலைமணி,துணை தோட்டக்கலை துறை அலுவலர் வேல்துரை, தோட்டக்கலைதுறை அலுவலர்கள் சிவசண்முகம்,கணேஷ் ஆகியோர் அரசின் சார்பாக விவசாயிகளுக்கு காய்கறி விதைகள் வழங்கினர்.அரசின் இலவச விதைகளில்  கத்திரி,வெண்டைக்காய்,கொத்தவரை, வெங்காயம்,சுரைக்காய்,முருங்கை,தக்காளி,பாகற்காய் மற்றும் பல்வேறு வகையான கீரைவிதைகள் ஆகியவை வழங்கப்படுகின்றன.கீரப்பாளையம் வட்டாரத்தில் உள்ள ஐம்பதுக்கும்மேற்பட்ட கிராமங்களில் இவ்விதை பெறுவதற்கு முப்பத்தியாறு கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.விதைகளை பெறுவதற்கு ஆதார் அட்டை மற்றும் ஒருபோட்டோவை எடுத்துவந்து விவசாயிகள் பெற்றுக்கொள்ளலாம் என்று கீரப்பாளையம் வட்டார அரசு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.வெய்யலூர் கிராமத்தில் நடைபெற்ற இலவச காய்கறி விதைகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஏராளமான விவசாயிகள் விதைகளை ஆர்வமுடன் பெற்றுச்சென்றனர்.