உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Sunday, October 20, 2019

கேள்வி ஞானத்தால் வள்ளலாரைப்பற்றி பாடிவரும் பத்தாம் வகுப்பு அரசுப்பள்ளி மாணவி




கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே அமைந்துள்ள வெய்யலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்&ஜெயசித்ரா தம்பதி.இவர்கள் கிராமத்தில் விவசாய வேலைகளை செய்து வாழ்ந்து வருகிறார்கள்.இவர்களுக்கு இரண்டு பெண்பிள்ளைகள்.இதில் இரண்டாவது பெண்ணான ஹரிணி என்பவர் வெய்யலூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.நன்றாக படித்து வரும் ஹரிணி தற்போது வள்ளலார் ப்ற்றி எதுவும் தெரியாமலே அவர் பாடல்கள்,அதன் சொற்பொழிவுகள் என கடந்த நான்கு -ஆண்டுகளாக செய்து வருகிறார்.இதற்கு ஹரிணியின் பெற்றோர் நன்றாக ஊக்கம்கொடுத்து வருகிறார்கள்.

இதுகுறித்து ஹரிணியின் பெற்றோர் கூறும்போது நாங்கள் ஒருநாள் வயலுக்கு சென்று விட்டு திரும்பும்போது எங்கள் வீட்டில் ஹரிணி வள்ளலார் பற்றிய சீடியை போட்டு கேட்டு அதற்கேற்றார்போல் நடனமாடிக்கொண்டிருந்தார்.இதைப்பார்த்த நாங்கள் ஹரிணிக்கு தொடர்ந்து ஊக்கம்கொடுத்து வந்தோம்.ஹரிணி ஒருமுறை  எதைக்கேட்டாலும் அப்படியே தொடர்ந்து பாட ஆரம்பிப்பாங்க. அவங்களுக்கு வள்ளலார்பற்றி எதுவும் தெரியாது.அதனால் இதன்பின்பு நாங்கள் ஹரிணியை பலமுறை வடலூர் சத்திய ஞானசபை,மேட்டுக்குப்பம்,மருதூர் உள்ளிட்ட வள்ளலார் தொடர்புடைய இடங்களுக்கு அழைத்து சென்றோம்.




வீட்டில் பாடப்புத்தகத்தை மட்டும் படிப்பாங்க ஹரிணி.வள்ளலார் பற்றிய புத்தகங்கள் பார்த்ததில்லை. அவரைப்பற்றிய பாடல்களை எப்போதாவது ஒலிவடிவில் கேட்பதுண்டு.அமைதியான சுபாவம் கொண்ட ஹரிணி இதுவரை வள்ளலார் பற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட சொற்பொழிவுகளை பாடியுள்ளார்.பல இடங்களில் இவர் பாடும் வள்ளலார் பற்றிய பாடல்களைக்கேட்டு பெரியோர்கள் பாராட்டியும்,வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

ஹரிணியின் குடும்பத்தினர் தற்போது கடந்த நான்கு ஆண்டுகளாக புலால் உண்ணாமல் சைவ உணவுகளை  சாப்பிட்டு வருகிறார்கள்.வள்ளலார் காட்டிய வழியில் தங்களது மகளுக்காக தங்களை மாற்றிக்கொண்டுள்ளனர்.





கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பேரூர் கிராமத்தில் வள்ளலார் பற்றிய சொற்பொழிவாற்றிக்கொண்டிருந்த மாணவி ஹரிணி  இதுப்பற்றி  கூறும்போது எனக்கு வள்ளலார்பற்றி நிறைய பாடவேண்டும்,பேசவேண்டும் என்று தானாகவே தோன்றியது.இதற்கு எனது பெற்றோர்கள், எனது சகோதரி ஆகியோர் பக்க பலமாக இருக்கிறார்கள்.எனக்குள் தோன்றுவதை நான்  பாடிவருகிறேன்.இன்னும் நிறைய பாடவேண்டும். படித்துக்கொண்டே வள்ளலார் கருத்தை அனைவருக்கும் எடுத்து செல்லவேண்டும் என்பது எனது விருப்பம் என்று கூறினார் மாணவி ஹரிணி.

உலக உயிர்களுக்கெல்லாம் ஜீவகாருண்யத்தை போதித்த வள்ளலாரைப்பற்றி இளம் வயதில் பள்ளி மாணவி ஹரிணி, அவரைப்பற்றி தெரியாமல் பாடி,சொற்பொழிவாற்றிவருவது பலரையும் ஆச்சர்யப்படவும்,அதிசயப்படவும் வைத்து வருகிறது.