உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Monday, October 21, 2019

புவனகிரியில் அரசு பள்ளியில் திருவள்ளுவர் சிலைத்திறப்பு




கடலூர் மாவட்டம் புவனகிரியில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது.இப்பள்ளிளியின் வளாகத்தில் புவனகிரி திருக்குறள் இயக்கத்தின் சார்பாக திருவள்ளுவர் சிலை  திறப்பு விழா நடைபெற்றது.திருக்குறள் இயக்கத்தின் தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார்.செயலாளர் உதயசூரியன் அனைவரையும் வரவேற்றார்.துணைத்தலைவர் முருகன்,துணைச்செயலாளர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இலக்கிய வித்தகர் அன்பழகன்,மருத்துவர் செந்தில்வேலன்,இரத்தின சுப்ரமணியன், சத்யநாராயணன் ஆகியோர் வாத்துரை வழங்கினார்கள்.திருக்குறள் சுடர் புலவர் செயராமன்,கங்கைமணிமாறன் ஆகியோர் திருவள்ளுவர் சிலையை பள்ளி வளாகத்தில் திறந்து வைத்து மரியாதை செய்தனர்.




புவனகிரியில் ஒவ்வொரு மாதமும் திருக்குறள் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.இந்த வகுப்பின்போது சிறுவர்முதல் பெரியோர் வரை அனைவரும் திருக்குறள் பற்றி அறிந்துகொள்ளும்விதமாக விளக்கமளிக்கப்படுகிறது.மேலும் இதில் கலந்துக்கொள்ளும் பெரியவர்களும்,சிறுவர்,சிறுமியர்களும் 1330 திருக்குறளையும் மனப்பாடமாக ஒப்புவிப்பது மிகச்சிறப்பானதாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இதுகுறித்து விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கும்போது தொடர்ந்து திருக்குறளை அதன் பெருமைகளையும் மக்களிடத்தில் கொண்டுபோய் சேர்ப்பதுதான் நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறோம்.  இன்று நூறாவது மாத சிறப்பு திருக்குறள் வகுப்பில் சிறப்பாக பள்ளி வளாகத்தில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும்,பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.முடிவில் பொருளாளர் ஞானவள்ளல் நன்றியுரை வழங்கினார்.