உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Monday, October 14, 2019

சேத்தியாத்தோப்பு அருகே பண்ணப்பட்டு கிராமத்தில் கீரப்பாளையம் வட்டார வேளாண்மைத்துறை சார்பில் வயல்வெளிப்பள்ளி நிகழ்ச்சி


சேத்தியாத்தோப்பு அருகே பண்ணப்பட்டு கிராமத்தில் கீரப்பாளையம் வட்டார வேளாண்மைத்துறை சார்பில் வயல்வெளிப்பள்ளி நிகழ்ச்சி.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது பண்ணப்பட்டு கிராமம்.இக்கிராமத்தில் கீரப்பாளையம் வட்டார வேளாண்மைத்துறை சார்பில் நீர்வள,நிலவள திட்டத்தின் கீழ் 2019&20 ஆண்டில் நெல்வயல்வெளிப் பள்ளி பயிற்சி நடைபெற்றது.இந்தப்பயிற்சியில் விவசாயிகளுக்கு நன்மை செய்யும் பூச்சிகள்,மற்றும் இயற்கை விவசாயம் குறித்து கீரப்பாளையம் வட்டார  வேளாண்மை உதவி இயக்குநர் பிரேமலதா விரிவாக எடுத்துரைத்தார்.மேலும் இதில் நெல் சாகுபடி செய்து வரும் விவசாயிகளுக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்கும் பதிலளிக்கும் விதமாக விவசாயிகள் கேள்விகளுக்கும் பதிலளித்து அவர்களின் சந்தேகங்கள் போக்கப்பட்டது.இதனை பண்ணப்பட்டு மற்றும் சுற்றுப்புறபகுதிகளைச்சேர்ந்த ஏராளமான விவசாயிகள் ஆர்வமுடன் கேட்டு பயன்பெற்றனர்.இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துணை வேளாண்மை அலுவலர் கோபி, மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் முத்துசரவணன் உள்ளிட்டவர்கள் செய்திருந்தனர்.நிகழ்ச்சியின் முடிவில் அப்பகுதியின் விவசாயிகள் நன்றி கூறினார்கள்.